கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

3. குட்டிப்புலி

சன் பிக்சர்ஸின் அபரிமிதமான விளம்பரத்துக்குப் பிறகும் நான்கு வாரங்கள் முடிவில் சென்னையில் 4.6 கோடிகளை மட்டுமே குட்டிப்புலியால் வசூலிக்க முடிந்திருக்கிறது. சசிகுமாரின் முந்தையப் படம் சுந்தரபாண்டியன் அனாயாசமாக ஆறு கோடியை தாண்டி வசூலித்தது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 3.9 லட்சங்கள். வார நாட்களில் 5 லட்சங்கள்.

2. தில்லு முல்லு

சென்ற வார இறுதியில் இப்படம் 62 லட்சங்களையும், வார நாட்களில் 71 லட்சங்களையும் வசூலித்துள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல் 2.2 கோடிகள். இந்த வாரம் மரியான், அம்பிகாபதி, அன்னக்கொடி ஆகியவை வெளியாவதால் தில்லு முல்லு வசூல் மூன்று கோடிக்குள் சுருட்டப்பட்டு விடும்.

 1. தீயா வேலை செய்யணும் குமாரு

சென்ற வார இறுதியில் சுந்தர் சி. யின் படம் 1.08 கோடியை வசூலித்தது. வார நாட்களில் அதைவிட அதிகம், 1.12 கோடிகள். ஆக, முதல் பத்து தினங்களில் இதன் சென்னை வசூல் 3.5 கோடிகள். இந்த வாரம் மூன்று படங்கள் வெளியாவதால் இதன் வசூலும் கணிசமாக பாதிக்கப்படும் என்பதுதான் சோகம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்