மாஜி ஹீரோவுடன் ஆட்டம் போட முடியாமல் திணறிய முமைத்கான்

கவர்ச்சி நடிகை முமைத்கான் சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழ் படங்களில் குத்தாட்டம் போட வந்துள்ளார். ராமநாராயணன் இயக்கும் ஆர்யா-சூர்யா படத்தில் டி.ராஜேந்தர் எழுதி இசையமைத்த குத்துப்பாடலுக்கு கவர்ச்சி நடனம் போட்டுள்ளார் முமைத்கான். இளம் நடிகர்களுடன் இணைந்து ஆடும் போது சலிக்காமல் ஆடும் முமைத்கான் டி.ஆருடன் ஆடும் போது திணறிவிட்டாராம். ஏன் என்பதை தெரிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்களேன்.

டப்பாங்குத்துக்கு நடனத்துக்கு பெயரெடுத்தவர் டி.ராஜேந்தர். அவருடன் ஆடும் போது அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிவிட்டாராம் முமைத்கான். சில ஸ்டெப்களை போடமுடியாமல் ரீடேக் வாங்கினாராம்.

முதல் நாள் ஆட்டத்தில் முமைத்கானின் முதுகெலும்பு கழன்று விட்டதால், அடுத்து இரண்டு நாள் லீவு போட்டுவிட்டு ஹோட்டல் அறையில் படுத்துக்கொண்டாராம். அதையடுத்து இரண்டாவது நாளாக டி.ஆருடன் கோதாவில் குதித்த முமைத்கான் ஒருவழியாக ஆடி முடித்துவிட்டாராம்.

படப்பிடிப்பை முடித்துக் கொண்டு மும்பைக்கு கிளம்பிய முமைத்கான், இன்றைய இளவட்ட நடிகர்களையே ஒரு கை பார்த்துவிடும் நான், ஒரு மாஜி ஹீரோவுடன் ஆட முடியாமல் திணறி விட்டேன். அந்த அளவுக்கு இந்த வயசிலும் யூத்தாக நடனமாடுகிறார் டி.ஆர்., என்று சொல்லிவிட்டு சென்றாராம்.

ஆர்யா சூர்யா படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன்தான் நடிப்பதற்கு புக் செய்யப்பட்டார். அவர் சிறையில் இருப்பதால் படத்தில் டி.ராஜேந்தருக்கு ஒரு குத்துப்பாடல் சேர்த்தார். இப்போது முழு படத்திலும் டி.ஆர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget