கவர்ச்சி வேடத்தில் கலக்க வரும் ரோஜா!

தமிழ், தெலுங்கு சினிமாவில் ஒரு பெரிய ரவுண்ட் வந்தவர் ரோஜா. ஆர்.கே.செல்வமணியின் செம்பருத்தி படத்தில் அறிமுகமான இவர், பின்னர் அவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டு அவரது மனைவியாகி விட்டார். பின்னர், ஆந்திர அரசியலில் குதித்தார். ஆனால், ரோஜாவால் பெரிய இடத்துக்கு வர முடியவில்லை. அதனால் மீண்டும் சினிமா பக்கம் வந்து விட்டார்.

தற்போது, சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் மாசானி படத்தில் வில்லியாக நடித்தார். ஆனால், ஆப்பிள் பெண்ணே என்ற படத்தில் கிளாமர் வேடத்தில் நடிக்கிறாராம். ரோஜாவைப் போன்ற மாஜி ஹீரோயினிகளெல்லாம் அம்மா வேடம், குணசித்ர வேடம் என்று நடித்துக்கொண்டிருக்கிற இவர் மட்டும் கிளாமர் பாதைக்கு செல்வதேன் என்று விசாரித்தபோது, இந்த படத்தில் கிளாமர் வேடம்தான் என்றாலும், கதையில் அவருக்கு பெரும் பங்கு உள்ளது. புதுமுகங்களே இப்படத்தில் ஜோடி சேர்ந்திருப்பதால், ரோஜா நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார். அதேபோல் தம்பி ராமைய்யா போலீசாக நடிக்கிறார். ரோஜாவும், இவரும் எதிரும் புதிருமான வேடங்களில் நடிக்கிறார்கள். அதனால் கதையோடு பார்க்கையில் ரோஜா கேரக்டரில் உள்ள கிளாமர் தெரியாது. அவரது நெகடிவான நடிப்புதான் மனதில் நிற்கும் என்கிறார்கள்.

பழைய பதிவுகளை தேட