சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் புதிய படம்

கமலை வைத்து இந்தியன் படத்தை இயக்கிய ஷங்கர் அந்த சமயத்திலேயே ரஜினியை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான சூழல் சிவாஜியில்தான் கைகூடியது. இருவரும் இணைந்த முதல் படமே சூப்பர் ஹிட் என்பதால், அடுத்தபடியாக அதைவிட பெரிய பட்ஜெட்டான எந்திரனில் இணைந்தனர். அந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், தற்போது ரஜினி, கோச்சடையான் பட வேலைகளிலும், ஷங்கர் ஐ பட வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இவர்களது கூட்டணி மூன்றாவது முறையாகவும் இணையப்போவதாக கோலிவுட்டில் செய்தி பரவியிருக்கிறது. இதற்காக ரஜினி-ஷங்கர் இருவரும் சந்தித்து கதையைப்பற்றிகூடி பேசிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அப்படி இந்த கூட்டணி மீண்டும் இணைந்தால், அது சிவாஜி, எந்திரனை மிஞ்சும் பிரம்மாண்ட படமாக இருக்கும். முக்கியமாக, ஜப்பான் உள்ளிட்ட ரஜினி படங்களுக்கு வரவேற்பு இருக்கும் வெளிநாட்டு ரசிகர்களையும் மனதில் கொண்டு அப்படத்தை உலக படமாக உருவாக்குவார்கள் என்றும் தெரிகிறது.

பழைய பதிவுகளை தேட