களிமண்ணு சினிமா விமர்சனம் | kalimannu movie review
பிளெஸ்ஸியின் களிமண்ணு படம் வெளியாகியிருக்கிறது. ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவக் காட்சியை படத்தில் பயன்படுத்தியதற்கு எழுந்த எதிர்ப்பும், ஆதரவும் களிமண்ணுவை 2013ன் எதிர்பார்ப்புக்குரிய படமாக்கியது. ஸ்வேதா மேனன் ஒரு பார் டான்சர். சினிமாவில் ஐட்டம் டான்சராக நுழைகிறார். தயாரிப்பாளர் ஒருவர் ஸ்வேதாவை பயன்படுத்திவிட்டு கைவிட, தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவரை காப்பாற்றும் டாக்சி டிரைவர் ஸ்வேதாவை திருமணம் செய்கிறார்.