தேகம் பளபளக்க வேண்டுமா

தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்க ஒரு ஆரஞ்சு டிப்ஸ்... ஆரஞ்சு ஜுஸை ப்ரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள்.
இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்கு மேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் பளிச் ஆகிவிடும். 

வெளி தூசுகளால் முகம் சிலருக்கு களையிழந்து காணப்படும். அவர்களின் முகத்தில் ஒளியேற்ற இதோ ஆரஞ்சு ப்ரூட் பேக். ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர, பேஷியல் செய்தது போல் முகம் பிரகாசமாக ஜொலிக்கும். 

தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜுஸையும் பயன்படுத்தலாம். ஆரஞ்சு ஜூஸ் 2 ஸ்பூன், தயிர் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 கழித்து கழுவி விடவும். அது வெயில் காலத்தில் சருமம் கறுமையடைவதை தடுக்கும். 

வெயிலில் போய் விட்டு வீட்டிற்கு வந்தவுடம் சருமத்தை நன்றாக கழுவி விட்டு ஆரஞ்சு சாறை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி விடவும். இது சருமத்தை கரும்புள்ளிகள் வருவதிலிருந்து காக்கும். 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget