சரக்கு அடித்து நடித்த நடிகை

பேராண்மை, மாஞ்சா வேலு, அரவான், பரதேசி, யா யா, திறந்திடு சீசே உள்பட சில படங்களில் நடித்தவர் தன்ஷிகா. தற்போது கிட்னா, மால்,
காத்தாடி என பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது தன்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியிருக்கும் திறந்திடு சீசே படம் அவரை பேச வைத்திருக்கிறது. குறிப்பாக, இதுவரை அவர் நடித்த படங்களை விட இந்த படத்தில் அவரை ரொம்பவே அழகாக காண்பித்திருக்கிறார்கள். அதோடு, தன்ஷிகாவும் அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாகவே நடித்திருந்தார். அதோடு, எந்த விமர்சனங்களுக்கும் அஞ்சாமல் சில காட்சிகளில் சரக்கு அடித்தபடியும் துணிச்சலாக நடித்திருந்தார். ஆனால் முன்பு அரிமா நம்பி படத்தில் ப்ரியாஆனந்த் பாரில் சரக்கு அடித்தபடி நடித்ததை பலரும் விமர்சித்து வந்த நிலையில் தன்ஷிகா சரக்கு அடித்ததை யாருமே விமர்சிக்கவில்லை. மாறாக, பப்பில் நடக்கும் கதை என்பதால் அந்த கேரக்டரில் அப்படி நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று அவர் அப்படி நடித்ததையும், அவரது நடிப்பு மிகவும் இயல்பாக இருந்ததாகவும் பலரும் பாராட்டி வருகிறார்களாம். அதனால், இனிமேல் இதுபோன்று வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம் தன்ஷிகா.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget