கோலிவுட்டில் மிஸ் இந்தியா

‘அட்டக்கத்தி’ தினேஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன்
இயக்கத்தில் ‘விசாரணை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில், ‘அட்டக்கத்தி’ தினேஷ் ‘ஒருநாள் கூத்து’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதில் தினேஷுக்கு ஜோடியாக 'அமரகாவியம்' படத்தில் நடித்த மியா ஜார்ஜ் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தில் மற்றொரு நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க இருக்கிறார். இவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் மிஸ் இந்தியா பட்டம் வென்றவர். 

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் முடிந்துள்ளது. அங்கு தினேஷ், மியா ஜார்ஜ் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர். அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருக்கிறது. இதில் நிவேதா கலந்துகொள்ள உள்ளார். இப்படத்தை புதுமுக இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

பழைய பதிவுகளை தேட