Wiio WI3 ஸ்மார்ட்போன்

Wiio நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போனான WI3 ஸ்மார்ட்போனை ரூ.7,499 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த
ஸ்மார்ட்போன் தற்போது ஸ்நாப்டீல் வழியாக பிரத்யேகமாக கிடைக்கும். 

டூயல் சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) ஆதரவு கொண்ட Wiio WI3 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் மூலம் இயங்குகிறது. இதில் ரெகுலர் சிம் மற்றும் மைக்ரோ சிம் கொண்டுள்ளது. Wiio WI3 ஸ்மார்ட்போனில் 240ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 540x960 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் qHD ஐபிஎஸூ டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் (MTK6582) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. 

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. Wiio WI3 ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ், FM ரேடியோ, ஜிஎஸ்எம், மைக்ரோ-யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் ஆகியவை வழங்குகிறது. இந்த கைப்பேசியில் 4000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. 

மேலும், இந்த ஸ்மார்ட்போன் இலவச பிளிப் கவர் மற்றும் பேக் கவர் உடன் வருகிறது. இது கருப்பு வண்ணத்தில் வருகிறது. மேலும் இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், மற்றும் கைரோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

Wiio WI3 ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

  • டூயல் சிம்,
  • 540x960 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் qHD ஐபிஎஸூ டிஸ்ப்ளே,
  • 1ஜிபி ரேம்,
  • 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் (MTK6582) ப்ராசசர்,
  • மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
  • 8 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • 3ஜி,
  • ஜிபிஆர்எஸ்/எட்ஜ்,
  • Wi-Fi 802.11 b/g/n,
  • ஜிபிஎஸ்,
  • FM ரேடியோ,
  • ஜிஎஸ்எம்,
  • மைக்ரோ-யுஎஸ்பி,
  • ப்ளூடூத்,
  • ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட்,
  • 4000mAh பேட்டரி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்