ZTE Q519T ஸ்மார்ட்போன்

ZTE நிறுவனம் சீனாவில் நூபியா Z9 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய பிறகு தற்போது, மற்றொரு ஸ்மார்ட்போனான Q519T ஸ்மார்ட்போனை
சீனாவில் $95 (சுமார் ரூ.6,000) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ZTE Q519T ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக, 4000mAh மிகப் பெரிய பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய ZTE Q519T ஸ்மார்ட்போன் ப்ளூ, கோல்டு மற்றும் ஒயிட் வண்ண வகைகளில் வருகிறது. சீன நிறுவனம் தற்போது ZTE Q519T ஸ்மார்ட்போன் சீனாவிற்கு வெளியே கிடைப்பது பற்றிய விவரங்களை இன்னும் வெளியிடப்படவில்லை. 

டூயல் சிம் ஆதரவு கொண்ட ZTE Q519T ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்குகிறது. ZTE Q519T ஸ்மார்ட்போனில் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் ஹச்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மாலி T720MP1 ஜிபியூ மற்றும் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1GHz குவாட் கோர் மீடியாடெக் (MT6735) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது.

ZTE Q519T ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், ஜிபிஎஸ், Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ-யூஎஸ்பி, FM ரேடியோ, LTE, ஜிஎஸ்எம் மற்றும் ப்ளூடூத் ஆகியவை வழங்குகிறது. மேலும் இதில் ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர், அம்பிஎண்ட் லைட் சென்சார் மற்றும் கைரோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

ZTE Q519T ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்:

  • டூயல் சிம்,
  • 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் ஹச்டி டிஸ்ப்ளே,
  • 1ஜிபி ரேம்,
  • 1GHz குவாட் கோர் மீடியாடெக் (MT6735) ப்ராசசர்,
  • மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
  • 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • 3ஜி,
  • ஜிபிஆர்எஸ்/எட்ஜ்,
  • ஜிபிஎஸ்,
  • Wi-Fi 802.11 b/g/n,
  • மைக்ரோ-யூஎஸ்பி,
  • FM ரேடியோ,
  • LTE,
  • ஜிஎஸ்எம்,
  • ப்ளூடூத்,
  • ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்,
  • 4000mAh பேட்டரி.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget