பொடுகை விரட்ட வேண்டுமா

பொடுகு என்பது சற்று தொல்லை தரும் விஷயம்தான். அடிக்கடி அரிக்கும். நாளுக்கு நாள் பொடுகு அதிகரிக்குமே தவிர என்ன செய்தாலும் குறையாது.
தண்ணீர் மாறினாலும் பொடுகுத் தொல்லை உடனே வந்துவிடும். 

பொடுகை சரியாக கவனிக்காவிட்டால் பின்னாளில் உங்கள் கூந்தலின் வேர்க்கால்களை தாக்கி பலமிழக்கச் செய்யும். இதன் விளைவு எப்போதும் முடி மெலிதாய்
பார்ப்பதற்கு அசிங்கமாய் காட்சி அளிக்கும். வேப்பிலையால் பொடுகை ஓட விரட்டமுடியும். அது எப்படி என பார்க்கலாம்.

வேப்பிலை நீர் : 

தேவையான பொருட்கள் : 

வேப்பிலை - 2 கைப்பிடி 
நீர் - 1 லிட்டர் 
தேன் - 1 ஸ்பூன்

செய்முறை : 

நீரை நன்றாக கொதிக்க வையுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து அதில் 2 கைப்பிடி வேப்பிலையை போட்டு இரவு முழுவதும் அப்படியே ஊற விடுங்கள்.

மறுநாள் காலையில் வேப்பிலை வடிகட்டி அந்த நீரை பத்திரமாய் எடுத்து வையுங்கள். இப்போது ஊறிய வேப்பிலையை அரைத்து அதனுடன் தேன் கலந்து தலையில் தடவுங்கள். 30 நிமிடங்கள் கழித்து தலையை அலசியபின் அந்த ஊறிய வேப்பிலை நீரால் இறுதியாக அலசுங்கள். பொடுகு தூர ஓடிடும். இதனை வாரம் 3 முறை செய்ய வேண்டும். 2 வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்லபலனை காணலாம்.

வேப்பிலை மாஸ்க் : 

தேவையான பொருட்கள் : 

வேப்பிலை - 2 கைப்பிடி 
வெந்தயம் - 2 ஸ்பூன் 
யோகார்ட் - அரை கப் 
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்.

செய்முறை : 

வெந்தயத்தை முன்தினமே ஊற வைத்திடுங்கள். பின்னர் ஊறிய வெந்தயத்துடன் வேப்பிலை கலந்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் யோகார்ட், எலுமிச்சை சாறு கலந்து, தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும். இந்த இரண்டு குறிப்புகளுமே மிகவும் பயனளிக்கும். உபயோகித்துப் பாருங்கள்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget