மேரேஜ் ஆன பின் பெண்கள் குண்டாவது ஏன்

ஒரு பெண்ணின் உடல் எடை அதிகரிப்பு, அவள் திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் ஆரம்பமாகிறது. முதல் குழந்தை பிறந்த பிறகு அவளது உடல்
எடை இன்னும் அதிகமாகிறது.

அதே பெண் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும்போதும் அவளது உடல் எடை அதிகரிக்கிறது. ஆனால், இந்த உடல் எடை முதல் குழந்தை பெற்றபோது அதிகரித்த உடல் எடையைவிட சற்று குறைந்ததாகும். இந்த உடல் எடை அதிகரிப்பு, அந்த
பெண்களுக்கு எதிர்கால வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கொண்டு வந்துவிடுகிறது.

அதை தவிர்க்க வேண்டும் என்றால் அவர்களது உணவு பழக்க வழக்கத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். இப்போதெல்லாம், பக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பாஸ்ட் புட் வகைகளைத்தான் பெண்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களது உடல் எடை அதிகப்படியாக கூடுதலாகிறது.

இன்றைய பெண்களுக்கு உடல் உழைப்பும் குறைந்து விட்டது. அதிக நேரம் தூங்குகிறார்கள். இதுவும் அவர்களது உடல் எடை அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணம். அதனால், தினமும் மூன்று வேளை உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதோடு, தேவையான உடற்பயிற்சிகளையும் தினமும் செய்து வந்தால், அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம்.

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸும் அதற்கான தீர்வாகும். பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மெனோபாஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெண் தன்னுடைய நிலையிலிருந்து தடுமாறும் கால கட்டம் இது.

கோபம், சோகம் என பல மனமாற்றங்களுக்கு ஆட்பட்டு திணறும் போது கணவனோ, மகனோ அவளின் நிலையை அறிந்து செயல்படுதல் முக்கியம். மெனோபாஸ் 45 வயதிற்கு மேல் பெண்ணின் சினைப் பையின் செயல்பாடு குறைந்து மாதவிலக்கு முறையற்றதாகி இறுதியில் நின்றுவிடும் நிலைக்கு மெனோபாஸ் என்று பெயர்.

பொதுவாக 45 வயதிற்கு மேல் 52 வயதுக்குள் ஏற்படும் இது, தற்போது 30 வயதிற்கும் மேல் உள்ள பெண்களுக்கே ஏற்படுகிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget