மகளிருக்கான சுகாதார குறிப்புகள்

15- 49 வயது வரை, கருத்தரிக்கக் கூடிய வயது என்று கூறப்படுகிறது. பெரும்பாலும், பெண்களுக்குக் கர்ப்பமாக இருக்கும் போதும் பிரசவமான
பிறகும் தான் கவனிப்பு அளிக்கபடுகிறது. ஒரு பெண் தன் பிள்ளைகளைப் பெற்றெடுத்தப்பின், அவளுடைய நலனைக் குறித்து தானோ அல்லது மற்றவர்களோ போதுமான கவனம் செலுத்துவதில்லை. ஆனால் இந்த வயதில் தான், பெரும்பாலும் பிறப்புறுப்பு மற்றும் சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

பொதுவாக பெண்கள் தங்கள் உடல் நலனைக் குறித்து போதுமான கவனம் செலுத்தமால் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

என்ன தனக்கு நேர்த்தாலும் பேசாமல் அமைதியாக இருந்து, சகித்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம்.

தன் உடல் நலக்குறைவுகளைப் பற்றி மற்றவர்களிடம் கூற தயக்கம், மற்றும் கூச்சம்.

பெண்களுக்கு வரக்கூடிய நோய்கள் பற்றியும் அதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் நேரிடக்கூடிய விளைவுகள் பற்றிய போதிய விழிப்புணர்வு/ அறிவு இல்லாமை.

சிகிச்சை எடுத்துக் கொள்ள போதிய பணவசதி இல்லாமை. கணவனிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ள முன்னுரிமை இல்லாமை.

குடும்பத்திலுள்ள மற்றவர்களைப் பற்றி அக்கரை காட்டி, தன்னுடைய பிரச்சனைகளைக் குறித்து கவனம் செலுத்தாமல் இருப்பது ஒரு ” தியாகச் செயல்” என்று நினைப்பது.

பொதுவாக பெண்களுக்கு வெள்ளைப்படுதல், அசாதாரணமாக குறைவாகவோ, அதிகமாகவோ மாதவிடாயின் போது அல்லது இடையில் உதிரம் போகுதல், சிறு நீர் கழிக்கும் போது எரிச்சல், அடி வயிற்று வலி, இடுப்பு வலி போன்ற உபாதைகள் ஏற்படக்கூடும். இவைகள் தொடர்ந்து காணப்பட்டால் அருகிலுள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வெண்டும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget