சன்னிலியோனுக்கு குரல் கொடுக்கும் ரம்யா

தமிழில் ரம்யா நம்பீசன் பல படங்களில் நடித்திருந்தபோதும், விஜயசேதுபதியுடன் அவர் நடித்துள்ள பீட்சா, சேதுபதி படங்கள்தான்
அவருக்கு வெற்றியாக அமைந்தன. இந்நிலையில், தற்போது நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற படத்தில் நடித்து வரும் ரம்யா நம்பீசனுக்கு மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த புலிமுருகன் படம் ஹிட்டாக அமைந்ததால் அங்கு சில புதிய படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அதோடு, சினிமாவில் நடித்துக்கொண்டே பல படங்கள் மற்றும் ஆல்பங்களில் பின்னணி பாடியும் வருகிறார் ரம்யா.

இந்த நிலையில், இதுவரை தனக்காக மட்டுமே டப்பிங் பேசியுள்ள அவர், தற்போது முதன்முறையாக கவர்ச்சிப்புயல் சன்னிலியோனுக்காக டப்பிங் பேசுகிறார். இந்தியில் சன்னி லியோன் நடித்த ராகினி எம்.எம்.எஸ் என்ற படம் தற்போது தமிழ், தெலுங்கில் டப்பாகிறது. தமிழில் ராத்ரி என்ற பெயரில் வெளியாகும் இந்த படத்தில் சன்னிலியோனுக்கு டப்பிங் குரல் கொடுக்க பல பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுகளின் குரல்களை பரிசீலித்தவர்கள், ரம்யா நம்பீசனின் குரல்தான் அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்த வகையில், தனது வழக்கமான ஸ்டைலில் இருந்து மாறி சன்னிலியோனுக்கேற்ப கிக்கான வாய்சில் டப்பிங் கொடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் ரம்யா நம்பீசன்.

பழைய பதிவுகளை தேட