கவர்ச்சிக்கு கட்டு போடும் மானஸா

கேரளத்து நடிகைகள் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அந்த வகையில், லட்சுமிமேனன் எப்படி 9-வது படிக்கும்போதே நடிக்க வந்தாரோ,
அதேபோல் ப்ளஸ்-2 படித்தபோது சண்டிக்குதிரை படத்தில் நடிக்க வந்தவர் மானஸா. கேரளத்து நடிகையான இவர், மலையாளத்தில் 6 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர் பத்தாவது வரை துபாயில் படித்து விட்டு ப்ளஸ்-2 படிப்பை கேரளாவில் தொடர்ந்திருக்கிறார்.

இந்நிலையில், சண்டிக்குதிரை படத்தை அடுத்து தற்போது பலசாலி என்ற படத்தில் நடிக்கிறார். மானாட மயிலாட சீசன்-2வில் முதலாவதாக வெற்றி பெற்ற சாண்டி நாயகனாக நடிக்கிறார். முதல் படத்தைப்போலவே இந்த படத்திலும் கிளாமர் இல்லாத வேடத்திலேயே நடிக்கும் மானஸா தொடர்ந்து கிளாமர் இல்லாத கதாநாயகி வேடங்களுக்கே முதலிடம் கொடுக்கப்போகிறாராம். இதுபற்றி அவர் கூறுகையில், இப்போதைய ரசிகர்கள் கவர்ச்சியை விட நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத்தான் ரசிக்கிறார்கள். அதனால், கவர்ச்சியாக நடித்துதான் மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்கிற நிலை நடிகைகளுக்கு இல்லை. அதனால் கவர்ச்சிகரமான வேடங்களில் நடித்து எனது இமேஜை கெடுத்துக்கொள்ளாமல், நல்ல அழுத்தமான பர்பாமென்ஸை வெளிப்படுத் தக்கூடிய கதாநாயகி வேடங்களுக்கு முதலிடம் கொடுக்கப்போகிறேன் என்கிறார் மானஸா.

பழைய பதிவுகளை தேட