கனவை நனவாக்கும் த்ரிஷா

தீபாவளிக்கு வெளியாகயிருக்கும் கொடி படத்தை அடுத்து மோகினி, கர்ஜனை, சதுரங்கவேட்டை-2, சாமி-2 என பல படங்களில் நடிக்கிறார்
த்ரிஷா. அதோடு தான் கதையின் நாயகியாக நடித்த நாயகி படம் தோல்வியடைந்து விட்டபோதும், மோகினி படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கிறார். மேலும், கொடி படத்தில் அதிரடியான ரோலில் நடித்துள்ள த்ரிஷா, இனிமேல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டப்போகிறாராம்.
இந்நிலையில், சமீபகால நடிகைகள் சினிமாவில் பிசியாக இருக்கும்போதே சைடு பிஸ்னஸை தொடங்கி வரும் நிலையில், த்ரிஷாவும் பெங்களூரில் ஒரு ஹோட்டல் கட்டி வருகிறார். த்ரிஷா இன்டர் நேசனல் என்ற பெயரில் அந்த ஹோட்டல் சுமார் 60 தங்கும் அறைகளை கொண்டு கட்டப்பட்டு வருகிறதாம். இப்படி த்ரிஷா ஹோட்டல கட்டுவதற்கு முக்கிய காரணம் அவரது தந்தை கிருஷ்ணன்தானாம். ஸ்டார் ஹோட்டல்களில் வேலை செய்து வந்த அவருக்கு, ஒரு ஹோட்டல் கட்ட வேண்டும் என்பது கனவாக இருந்து வந்ததாம். ஆனால் அது நிறைவேறாமலேயே அவர் இறந்து விட்டார். அதையடுத்து இப்போது தந்தையின் கனவை நனவாக்கும் வகையில் அந்த ஹோட்டலை கட்டி வருகிறாராம் த்ரிஷா.

பழைய பதிவுகளை தேட