அம்மா வேடத்தில் அசத்த வரும் மேனகா

தமிழில் 1980ல் வெளியான ராமாயி வயசுக்கு வந்துட்டா என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷின் அம்மா நடிகை மேனகா. அதன்பிறகு
சாவித்ரி, கீழ்வானம் சிவக்கும், நெற்றிக்கண், தூக்குமேடை, நிஜங்கள், நிரந்தரம், காதோடுதான் நான் பேசுவேன், உறங்காத நினைவுகள் என பல படங்களில் நடித்தவர், மலையாளம், கன்னடம் இந்தியிலும் நடித்துள்ளார். அதோடு, மலையாளத்தில் பல படங்களை தயாரித்திருக்கிறார்.

சமீபகாலமாக மகள் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதால் அவருக்கு உறுதுணையாக இருந்து வரும் மேகனா தற்போது, ஐஎம்ஏ -என்றொரு குறும் படத்தில் பிரதாப் போத்தனுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தில் அழுத்தமான வேடத்தில் நடிக்கும் மேனகா, தனது நடிப்புக்கு கிடைக்கிற ரெஸ்பான்சைப் பொறுத்து அடுத்தபடியாக சினிமாவிலும் ஒரு ரவுண்டு வரலாம் என்று தீர்மானித்திருக்கிறாராம்

பழைய பதிவுகளை தேட