விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி செய்வது எப்படி

“முதலில் நம்மை திடப்படுத்தி கொள்ளவேண்டும். இல்லையேல் மயங்கி விழுந்துவிடுவோம். அதனால் திடமான மனதுடன் விபத்துக்குள்ளானவரை
அணுகவேண்டும். விபத்துக்குள்ளானவர், சுதாரித்து எழுந்துவிட்டால் பிரச்சினை இல்லை; ஆனால் அதற்கு மாறாக மயங்கிவிட்டால், அவரை ஒருகளித்து படுக்க வையுங்கள். இது...ஆக்ஸிஜன் நிறைந்த காற்றை மூளைக்கு கொண்டு செல்லும். அதனால் மயக்கநிலையில் இருந்து எழுந்துவிடுவார். அதற்கு பின் தோள்களைத் தட்டி பேச்சுக்கொடுக்க முயற்சிக்க வேண்டும். ‘எங்கே வலிக்கிறது... என்ன செய்கிறது’ என்று கேட்டுக்கொண்டால், அதற்கு ஏற்றபடி அவரைக் கையாளலாம்.

இவை கைக்கொடுக்காத பட்சத்தில் பாதிக்கப்பட்ட வருக்கு மூச்சு இருக்கிறதா..? என்று பாருங்கள். வயிறு ஏறி இறங்குவதை பார்த்தும், நமது காதுகளை அவரின் நாசிக்கு அருகில் கொண்டு போவதன் மூலமும் இதை உணரலாம். ஒருவேளை மூச்சு இல்லை என்றால், விபத்து நடந்த அதிர்ச்சியில் இதயத் துடிப்பு நின்றிருக்கும். உடனே, ‘இறந்து விட்டார்’ என்று முடிவு செய்துவிட வேண்டாம். “கார்டியோ பல்மனரி ரிசஸ்சிடேஷன்” எனப்படும் சி.பி.ஆர் சிகிச்சையை உடனடியாகச் செய்தால் மீண்டும் இதயம் துடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்குள் ஆம்புலன்ஸ் வந்து விடும்” 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget