விஜய் நடிப்பில், பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டுள்ள நண்பன் படம் வசூல் சாதனை படைத்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. படம் வெளியாகி 10 நாட்கள் ஆகி விட்ட நிலையில் இதுவரை ரூ. 110 கோடியை அது வசூலித்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
படம் வெளியிடப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வரவேற்புடன் ஓடி வருவதாகவும், விஜய் மற்றும் மற்றவர்களின் நடிப்புக்கு
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
படத்தில் விஜய் உள்ளிட்ட அத்தனை பேரும் இயல்பாக நடித்துள்ளதை அனைவரும் ரசிப்பதாலும், வித்தியாசமான விஜய்யைப் பார்க்க ரிபீட் ஆடியன்ஸ் எனப்படும் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும்தான் படம் பெரும் வெற்றி பெற்றிருப்பதாக கூறுகிறார்கள்.
மேலும் வசூல் சாதனைகளை இது படைக்க ஆரம்பித்திருப்பதாகவும் கூறுகிறார்கள். பன்ச் டயலாக்குகளில் மட்டுமல்லாமல் பாந்தமான நடிப்பாலும் தன்னால் அசத்த முடியும் என்பதை விஜய் நிரூபித்து விட்டார் என்பதுதான் இந்தப் படத்தின் டாப் ஹைலைட்டாக அமைந்துள்ளது.
விஜய் மட்டுமல்லாமல் ஜீவா, ஸ்ரீகாந்தக், சத்யன், சத்யராஜ் என மற்ற கலைஞர்களின் நடிப்புக்கும் பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
இதுவரை விஜய் நடித்து வெளியான படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்ற பேச்சும் படத்திற்கு பெரும் விளம்பரமாக அமைந்து விட்டது என்கிறார்கள் திரையுலகினர்.
விஜய் பட வசூல் குறித்து இதுவரை படத் தயாரிப்புத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்ற போதிலும் பத்து நாட்களில் ரூ. 110 கோடி வசூல் என்ற பேச்சே அந்தப் படத்திற்கு இன்னொரு விளம்பரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.