பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் இந்த புத்தாண்டில் நட்சத்திர ஹோட்டலில் நடனம் ஆடினார். ஆமாம் லம்பா பணம் வாங்கிக் கொண்டு தான். அவ்வாறு ஆடும்போது இந்த ஆண்டு எந்த பாடல் மிகவும் பிரபலமாக உள்ளதோ
அந்த பாட்டுக்கு ஆட்டம் போட்டார்.
இந்த ஆண்டு நிகழ்ச்சிக்கு அவர் ஆட்டம் போட தேர்வு செய்த ஆடிய பாடல் தனுஷ் பாடி உலகமே முணுமுணுக்கும் 'ஒய் திஸ் கொலவெறி, கொலவெறிடி'. கொலவெறிடி பாடலை கோடிக்கணக்கானவர்கள் கேட்டுள்ளனர். இந்த பாடல் மூலம் தனுஷ் பாலிவுட்டில் பிரபலமாகிவிட்டார். அமிதாப் பச்சன் தனுஷை புகழ்ந்துள்ளார் என்றார் பார்த்துக் கொள்ளுங்கள்.
என்னடா இது மல்லிகா ஷெராவத் சிம்புவின் ஒஸ்தி படத்தில் நடித்துவிட்டு தனுஷ் பாட்டுக்கு ஆடினார் என்று நினைக்க வேண்டாம். ஒஸ்தியில் அவர் குத்தாட்டம் போட்ட சலா சலா பாட்டுக்கும் ஆடினார்.