அஜீத்தின் ஆரம்பம் - விஷ்ணுவர்தன் பேட்டி

எங்களது கூட்டணியில் உருவான ‘‘பில்லா’’ படத்தின் வேகத்தை காட்டிலும் ‘‘ஆரம்பம்’’ படம் ரொம்ப வேகமாக இருக்கும் என்று அஜீத்தை வைத்து ‘‘ஆரம்பம்’’ படத்தை இயக்கியுள்ள விஷ்ணுவர்தன் கூறியுள்ளார். பில்லா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் ஆரம்பம். இப்படத்தில் அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி, தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் பொதுவாக  தான் பேசுவதை விட தன் படம் பேசுவதே தனக்கு பெருமை என கூறுபவர். ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை ஒட்டி அவர் தந்த பேட்டி இதோ... ஆரம்பம்  என்ற தலைப்பு எல்லோரையும் கவர்ந்துள்ளது. இந்த தலைப்புக்கான தாமதம் திட்டமிடப்பட்டது அல்ல. ஆனால் இந்த வரவேற்பு கிடைக்க அந்த தாமதமும் ஒரு காரணம் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான். இது ஒரு  போராட்ட குணமுள்ள ஒரு தனி மனிதனின் கதை. கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அந்த பிரதான சூரியனை சுற்றி வரும் கோள்கள்தான். 

இந்த படத்திலும் அஜீத் சார் மங்காத்தா படம் போலவே நரை கலந்த தலை முடியுடன் தான் நடிக்கிறார். அந்த படத்துக்கு முன்னரே அவரிடம் என் படத்துக்கு இந்த கெட் அப்பில் தான் வேண்டும் என்று கேட்டிருந்தேன், ஆனால் வெங்கட்பிரபு முந்தி கொண்டார். இந்த ஸ்டைல் அவர் அளவுக்கு வேறு யாருக்காவாவது அமைந்து இருக்குமா என்றால் சந்தேகமே .இது ஒரு ஆக்ஷ்ன் கலந்த விறுவிறுப்பான வேகமான படம். எங்களது கூட்டணியில் உருவான பில்லா படத்தை விட பல மடங்கு வேகமாக இருக்கும்.  அஜீத் ரசிகர்களை மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக ஆரம்பம் இருக்கும் என்பது நிச்சயம் என்று  நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget