நிஷா அகர்வாலுக்கு உதட்டோடு உதடு உம்மா கொடுத்தார் விமல்!

இயக்குனர் பிரேம் நிசார் இயக்கத்தில் விமல் மற்றும் தெலுங்கு நடிகை நிஷா அகர்வால் நடித்துக் கொண்டிருக்கும் படம் “இஷ்டம்”. களவானி படத்தின் மூலம் பிரபலமான விமல், இன்றைய இளம் நடிகர்கள் வட்டாரத்தில் படு பிஸியான நடிகர். ஹீரோயின் நிஷா அகர்வால் தெலுங்கில் இரண்டு படங்களிலும் படு சூடாக நடித்தவர்.   நடிகை காஜல் அகர்வாலின் தங்கை தான் நிஷா அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது. இஷ்டம் படக்குழு பாடல் காட்சிகளுக்கும், படத்தின் சில காட்சிகளுக்கும் சூட்டிங் ஸ்பாட் தேடி சுவிட்சர்லாந்து போயிருக்கிறார்கள்.
அங்கே படத்திற்காக ஒரு முத்தக்காட்சி எடுத்திருக்கிறார்கள்.அந்த காட்சிக்காக விமலிடம் நிஷாவிற்கு ஒரே ஒரு லிப் டூ லிப் கிஸ் தர சொன்னார்களாம். நிஷாவும் இதற்கு மறுப்பு தெரிவிக்காததால் காட்சிக்கு இருவரும் தயாராகியுள்ளார்கள். முத்தக்காட்சியின் போது நிஷா எவ்வித அலட்டலும் இல்லாமல் முத்தம் கொடுத்துள்ளார். ஆனால் நம்ம ஹீரோ வரிசையாக எல்லா காட்சிகளிலும் சொதப்பி பத்து காட்சிகளுக்கு மேல் “ஒன்ஸ் மோர்” சொல்ல வைத்ததாக அவரே கூறியுள்ளார். இந்த செய்தியை அறிந்த விமலின் நட்பு வட்டாரம் ”ரொம்ப கஷ்டப்பட்டு பண்ணுனீங்களா அல்லது இஷ்டப்பட்டுதான் பண்ணுனீங்களா பாஸ்” என்று கலாய்க்கிறார்களாம். ’’டேய் நான் புதுசா கல்யாணம் ஆனவன்டா ஏன்டா என் குடும்பத்துல குண்டு வைக்க்றீங்க’ என்று காலில் விழாத குறையாய் கேட்ட பிறகும் விமலின் ஃப்ரெண்ட்ஸ் கலாய்ப்பதை நிறுத்தவில்லையாம். படத்தோட பேரு இஷ்டம்னு வெச்சதால இஷ்டத்துக்கு கொடுத்துட்டாரு போல...

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget