உலகின் மிக பழமையான போஸ்ட் ஆபீஸ்!


இங்கிலாந்தில் உள்ள உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த தபால் நிலையம் தனது 300-வது பிறந்த நாளை கொண்டாட தயாராகி வருகிறது. இங்கிலாந்தில் முதன்முதலாக கடந்த 1712-ம் ஆண்டில் சான்குகார் என்ற இடத்தில் தபால் நிலையம் திறக்கப்பட்டது. இது இங்கிலாந்துடன் ஸ்காட்லாந்து இணைந்த 5 ஆண்டுகளுக்குப் பின்பு தொடங்கப்பட்டது. இப்போது இந்த தபால் நிலையத்திற்கு வயது 300 ஆகிறது.



300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தபால் நிலையத்தில் தொடக்கத்தில் ஆட்கள் நடந்து சென்றுதான் தபால்களை வழங்கி வந்தனர். பின்னர் பார்சல்கள் அனுப்பும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.


இதை தொடர்ந்து குதிரைகளில் சென்று தபால் டெலிவரி செய்யப்பட்டது. இங்கு 1738-ம் ஆண்டு மெயில் சேவை தொடங்கப்பட்டது. உலகின் மிக பழமையான தபால் நிலையம் என்ற பெருமை பெற்றுள்ள இது இந்த ஆண்டு தனது 300-வது பிறந்நாளை கொண்டாட தயாராகி வருகிறது.


இதற்கு அடுத்தபடியாக சுவீடன் தலைநகரில் உள்ள ஸ்டாக் ஹோம் தபால் நிலையம் 2-வது இடத்தை பிடிக்கிறது. இது சான்குகரைவிட 8 ஆண்டுகள் இளையது. 3-வது இடத்தை சிலி நாட்டில் உள்ள சாண்டியாகோ பிடித்துள்ளது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget