விண்டோஸ் 8 தொடு உணர் கட்டளைகள்

தொடு உணர் பழக்கக் கட்டளை வகையினை, ஆப்பிள் கொண்டு வந்தாலும், அதனைத் தன் விண்டோஸ் 8 சிஸ்டம் இயக்கத்தில் கொண்டு வந்து, முற்றிலும் புதிய மாற்றம் ஒன்றினை, கம்ப்யூட்டர் இயக்கத்தில் கொண்டு வந்துள்ளது மைக்ரோசாப்ட். விண்டோஸ் 8 சிஸ்டத்தினை தொடு திரை வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் அல்லது லேப் டாப் கம்ப்யூட்டரில் வைத்துள்ளவர்கள், எப்படி தொட்டு இழுத்தால், என்ன செயல்பாடு மேற்கொள்ளப்படும் என்பதனைப் புரிந்து
கொள்ள சில வாரங்கள் ஆவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். தொடு உணர் திரை கொண்ட கம்ப்யூட்டர்களில் இந்த வகை கட்டளைகளை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்று பார்ப்போம். 

1. சார்ம்ஸ் பார் பெற : ஸ்டார்ட் மெனுவிற்குப் பதிலாக, விண்டோஸ் 8, சிறிய பட்டன்களை இயக்குவதற்கென வழங்கியுள்ளது. விண்டோஸ் 8 சிஸ்டத்தினுள்ளாக, இந்த பட்டன்களை நாம் பயன்படுத்தி சில செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். மைக்ரோசாப்ட் இவற்றை Charms என அழைக்கிறது. இவற்றில் Search, Share, Start, Devices மற்றும் Settings ஆகியவையும் அடங்கியுள்ளன. 
சார்ம்ஸ் பார் உள்ளாக, இவற்றில் ஏதேனும் ஒன்றை அணுக வேண்டும் என்றால், திரையின் வலது பக்கம் இருந்து வலது புறமாக ஸ்வைப் செய்திட வேண்டும். இதன் பின்னர், எந்த சார்ம்ஸ் பட்டனில் உள்ள செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதன் மீது லேசாகத் தட்டினால் போதும்.

2. முந்தைய அப்ளிகேஷனை மீண்டும் இயக்க : எந்த அப்ளிகேஷனை இயக்கிச் சற்று முன் இறுதியாக மூடினீர்களோ, அந்த அப்ளிகேஷனை மீண்டும் இயக்க, திரையின் இடது புறம் இருந்து வலது பக்கமாக ஸ்வைப் செய்திடவும்.

3. அப்ளிகேஷன்களை மூட : விண்டோஸ் 8, முந்தைய சிஸ்டங்களில் எப்படி அப்ளிகேஷன்களை மூடினோமோ, அதே போல, இப்போதும் அப்ளிகேஷன்களை மூடிட அனுமதிக்கிறது. மேலாக வலது மூலையில் விண்டோவில் தரப்படும் X கட்டத்தில் அழுத்தி, அப்ளிகேஷன் இயக்கத்தினை மூடலாம். ஆனால், மெட்ரோ அப்ளிகேஷன்களில் இந்த பட்டன் இருக்காது. இவற்றை மூட நாம் பார்க்கும் படியாக எந்த வழியும் காட்டப்பட மாட்டாது. மெட்ரோ ஸ்டைல் அப்ளிகேஷன் ஒன்றை மூடிட, திரையின் மேலாக உங்கள் விரலை வைத்து, அப்படியே அந்த அப்ளிகேஷனைத் திரையின் கீழ்ப்புறம் நோக்கி இழுக்கவும். அவ்வளவுதான், அப்ளிகேஷன் மூடப்பட்டுவிடும்.

4 ரைட் கிளிக் இங்கு உண்டா? : டெஸ்க்டாப் இயக்க சூழ்நிலையில், நாம் அடிக்கடி ரைட் கிளிக் செய்வது உண்டு. தொடு உணர் கட்டளை கொண்ட விண்டோஸ் 8ல், இந்த கட்டளையில், கூடுதலாக வசதிகள் தரப்பட்டுள்ளன. ஆனால், அவை சற்று வித்தியாசமானவையாகவும் உள்ளன. போல்டரில் உள்ள பைல் ஒன்றுக்கான ரைட் கிளிக் மெனுவினைப் பெற, பைல் மீது டேப் செய்து, விரலை அப்படியே வைத்திருக்க வேண்டும். ரைட் கிளிக்கிற்கான மெனு பாப் அப் ஆகும் வரை அப்படியே வைத்திருந்தால், இந்த மெனு கிடைக்கும். பல மெட்ரோ அப்ளிகேஷன்களில் மெனுக்கள் கிடைப்பதில்லை. அவற்றிற்குப் பதிலாக, சிறிய அப்ளிகேஷன் பார்கள் தரப்படுகின்றன. இவை ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராமின் மேலாகவும், கீழாகவும் கிடைக்கின்றன. இவற்றைக் காண திரையின் கீழாக உங்கள் விரலை வைத்து, ஸ்வைப் செய்திடவும்.

5. பைல் செல்க்ட் செய்திட : விண்டோஸ் 8 சிஸ்டத்தில், பைல் ஒன்றை செலக்ட் செய்திட, மெட்ரோ ஸ்டைல் அப்ளிகேஷன் உள்ளாக, பைல் மீது உங்கள் விரலை வைத்திடவும். விரலை மேலாகத் தூக்காமல், மெதுவாக, உங்கள் விரலை கீழாக இழுக்கவும். பைல் தேர்ந்தெடுக்கப்பட்டு, உங்கள் கட்டளைக்குக் காத்திருக்கும்.
மேலே சொல்லப்பட்ட தொடுதல் செயல்பாடுகளை மனதில் வைத்துக் கொண்டு, பழக்கப்படுத்திக் கொண்டால், விண்டோஸ் 8 மற்றும் அது இயக்கும் சாதனங்கள் அனைத்தும் உங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும் சாதனங்களாகத் தெரியும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget