சந்திரமுகி ரிட்டன்ஸ்


ஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் அனிமேஷன் படம் “கோச்சடையான்”. ரஜினியின் மகள் சௌந்தர்யா அஸ்வின் இந்த படத்தை இயக்குகிறார். கோச்சடையான் முடிந்ததும் நிறுத்தப்பட்ட ராணா படப்பிடிப்பு துவங்குமா? என்ற கேள்விக்கு இல்லை என்று பதில் சொல்வது போல, ரஜினி அடுத்ததாக பி.வாசு இயக்கும்
படத்தில் நடிப்பதாக தெரிகிறது.
ரஜினியின் மன்னன், சந்திரமுகி ஆகிய படங்களை இயக்கியவர் பி.வாசு. இந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை சிவாஜி பிலிம்ஸ் நிறுவனம் ஏற்றுள்ளது. இந்த கூட்டணி மெகா ஹிட்டான “சந்திரமுகி” படத்தின் கூட்டணி என்பதால், இந்த படம் அடுத்த சந்திரமுகியாக இருக்குமோ! என்ற ஆவல் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
இயக்குனர் கதையை எழுதி முடிக்கும் நிலையில் உள்ளார். ரஜினியும் கோச்சடையான் படத்திற்கு குறைந்த நாட்களே கால்ஷீட் கொடுத்திருப்பதால், பி.வாசு வின் படம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று தெரிகிறது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget