கொலைவெறி பாடல் முலம் உச்சத்தை தொட்ட தனுஷ் மீது சிம்புவுக்கு போட்டியா / பொறாமையா?


கொலைவெறி பாட்டு யூ-ட்யூபில் பிரபலமானதன் மூலம் பெரும் புகழ் பெற்று இருக்கிறார் நடிகர் தனுஷ். இந்தியா முழுக்க பிரபலமான முகமாகிவிட்டார் தனுஷ். அதைப் பார்த்து வெந்து வெதும்பிப் போயுள்ளனர் போட்டி நடிகர்கள். அதில் முக்கியமானவர் தனுஷுக்கு எப்போதும் எதிலும் போட்டியாக இருக்கும் சிம்பு. ஜப்பான் பிரதமருக்கு தான் அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் முக்கியப் பிரமுகர்கள் பட்டியலில் தனுஷையும் சேர்த்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.



தனுஷின் இந்த திடீர் வளர்ச்சியை பற்றி தனுஷின் நண்பரும், பாடகருமான நடிகர் சிம்புவிடம் கேட்ட போது “பாட்டு நல்லா தான் இருக்கு. அவர் என் நண்பர்” என்று மட்டும் சொன்னார். ஆனால் சிம்பு தற்போது “Love Anthem For World Peace" என்ற ஆல்பம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இந்த ஆல்பத்தின் சில காட்சிகளை வீடியோவாக யூ-ட்யூபில் போட்டிருக்கிறார் சிம்பு. இந்த வீடியோவில் சிம்பு பாடுகின்ற சில காட்சிகள் மற்றும் சிம்புவின் நனம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. சிம்புவின் இந்த வீடியோவை பார்த்தவர்களும் கேள்விப்பட்டவர்களும், தனுஷின் மேல் சிம்பு கொண்ட பொறாமையின் விளைவு தான் இந்த ஆல்பம் என்கின்றனர். ஆனால் சிலரோ இதை போட்டியாக கருதுகின்றனர். யார் பேச்சையும் காதில் வாங்காமல் முழுப்பாடல் மற்றும் நடனம் ஆகியவற்றுடன் முறையாக எடிட் செய்து விரைவில் இந்த ஆல்பத்தை உங்களிடம் சேர்க்கிறேன்” என்று சிம்பு கூரியுள்ளார். இந்த பாடலில் சிம்புவுடன் ஒரு முக்கிய பிரபலம் நடனமாடுகிறார் என்று தெரிகிறது. 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget