84 வது ஆஸ்கர் விருதுகள் பற்றிய முழு விபரம் உங்களுக்காக!


2012 ஆஸ்கர் விருது போட்டிப் படங்கள் ஒரு பார்வை கட்டுரையில் நாம் தெ‌ரிவித்திருந்த நம்பிக்கை பலித்தது. 2012 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் போட்டியில் சிறந்தப் படத்துக்கான விருதை தி ஆர்ட்டிஸ்ட் வென்றுள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு எவரும் குறை சொல்ல முடியாத முடிவு இது என்பதில் சந்தேகமில்லை. 10 ஆஸ்கர் விருதுகளுக்கு ப‌ரிந்துரைக்கப் பட்ட இப்படம் சிறந்தப் படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த ஒ‌ரி‌ஜினல் ஸ்கோர், சிறந்த காஸ்ட்யூம் டிஸைன் என ஐந்து விருதுகளை வென்றது. 


11 பி‌ரிகளில் ப‌ரிந்துரைக்கப்பட்ட மார்ட்டின் ஸ்கார்சஸின் ஹியூஹோ சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம் உள்பட சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்பட 5 பி‌ரிகளில் விருது பெற்றது. சிறந்த நடிகைக்கானதுதான் கடுமையான போட்டி. இதில் தி ஹெல்ப் படத்தின் நாயகியை வென்று ப‌ரிசை தட்டிச் சென்றார் ஏற்கனவே இருமுறை ஆஸ்கர் விருது பெற்ற Meryl Streep. அயன் லேடி படத்துக்காக இந்த விருது அவருக்கு கிடைத்தது.


விழாவின் முக்கிய அம்சம்ங்கள்:


விழாவுக்கான பின்னணி இசை நம்மூர் ஏ.ஆர்.ரஹ்மான். 


இந்தமுறை விழா அரங்கு அபாரம். எளிமையான ஆனால் அற்புதமான வடிவமைப்பு. 


தி ஆர்ட்டிஸ்ட் சிறந்த படமாக அறிவிக்கப்பட்டதும், அதில் நடித்த நாயும் மேடைக்கு அழைத்து வரப்பட்டது.


பிராட்பிட் நடித்த மணிபால் படம் ஆறு பி‌ரிவுகளில் விருதுக்குப் ப‌ரிந்துரைக்கப்பட்டு பூ‌ஜ்‌ஜியத்துடன் திருப்திப்பட்டுக் கொண்டது.


ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் வார் ஹார்ஸ் படமும் ஆறு பி‌ரிவுகளில் ப‌ரிந்துரைக்கப்பட்டு ஒரு விருதைக்கூட பெறவில்லை. இவரது தி அட்வென்ஜர் ஆஃப் டின்டின் படமும் ராங்கோ படத்துடன் போட்டியிட்டு தோற்றுப் போனது.


ஐந்து பி‌ரிவுகளில் போட்டியிட்ட ஜா‌ர்‌ஜ் க்ளூனி நடித்த தி டிசென்டன்ஸ் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை வென்றது.


ஹியூஹோ படத்துக்காக சிறந்த கலை இயக்கத்துக்கான விருது பெற்ற Dante Ferretti (Production Design), Francesca Lo Schiavo (Set Decoration) இருவரும் தங்கள் விருதை இத்தாலிக்கு அர்ப்பணித்தனர். இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.


சிறந்தப் படத்துக்கான போட்டியில் இடம்பெற்ற தி ட்‌ரீ ஆஃப் லைஃப் விருது வெல்லும் என பலரும் கணித்தனர். அது பொய்த்ததில் உலக ரசிகர்கள் அனைவரும் ஆனந்தம் அடைந்திருப்பார்கள்.


ஆஸ்கர் விழாவில் சந்தோஷ அழுகை ஒரு முக்கிய அம்சம். இம்முறை அதனை ‌நிறைவாகச் செய்தவர் Octavia. தி ஹெல்ப் படத்துக்காக சிறந்த துணை நடிகை விருது பெற்றதும் கதறிவிட்டார்.


ஏஞ்சலினா ஜோலி, பெனலப் குரூஸ் போன்ற அழகிகள் இருந்தும் அரங்கை கவர்ந்தவர் Meryl Streep. ஜூன் 22 வந்தால் இவருக்கு வயது 63. நம்பவே முடியாது... வாட் ஏ பியூட்டி.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget