காதலர் தினத்திற்கு இன்னும் சில தினங்களே இருக்கின்றன. காதலர் தின பரிசாக என்ன கொடுக்கலாம் என்று காதலர்கள் அனைவரும் பல வகையான பரிசுகளை தேடி கொண்டு இருக்கின்றனர். காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இங்கே பல புதிய ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன்கள் வெளியாகி உள்ளன.
இதில் முக்கியமாக மூன்று லைவ் வால்பேப்பர் அப்ளிக்கேஷன்கள் மனம் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
வேலன்டைன்ஸ் டே ஃபையர்ஃபாக்ஸ் 2012, வேலன்டைன்ஸ் டான்ஸர் மற்றும் வேலன்டைன்ஸ் ஃபோட்டோ ஹார்ட் லாக்கெட் என்பது தான் அந்த புதிய அப்ளிக்கேஷன்கள். இந்த மூன்றும் லைவ் வால்பேப்பர் அப்ளிக்கேஷன்கள். இந்த மூன்று ஆப்ஸ்களையும் ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோ போன்களில் பெறலாம்.
தொழில் நுட்பம் சார்ந்த புதுமைகளை வழங்கும் பரிசுகளை கொடுக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் இந்த லைவ் வால்பேப்பர் ஆப்ஸ்கள் சிறந்ததாக இருக்கும்.