இத்தரம்மாயிலது சினிமா விமர்சனம்

தெலுங்கில் போக்கிரி, பிஸினஸ்மேன் படங்களில் மாபெரும் வசூல் சாதனை படைத்த இயக்குனர் பூரி ஜெகன்நாத், ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனும், தேசமுத்ரு படத்திற்குப் பிறகு இணைந்துள்ள படம் தான் "இத்தரம்மாயிலதோ".  

கனிம ஊழலில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அபேஸ் செய்யப்பட்ட அடிநாதத்துடன் கதை துவங்குகிறது. சென்ட்ரல் மினிஸ்டரின் மகள் அகான்ஷாவான காத்ரின்
தெரஸா சைக்காலஜியில் முதுகலை படிப்பதற்காக ஐரோப்பா செல்கிறார்.  ஐரோப்பாவில் தங்கச் செல்லும் வீட்டில் அமலாபாலின் டைரி இவர் கையில் கிடைக்கிறது. டைரியை படிக்கும் காத்ரின், அமலாபாலுக்கும் அல்லு அர்ஜுனுக்கும் இடையே இருக்கும் காதலை படித்து தெரிந்து கொள்கிறார்.  டைரியில் வைக்கப்பட்டுள்ள போட்டோவை வைத்து சன்ஜு ரெட்டியாகிய அல்லு அர்ஜுனை அடையாளம் காண்கிறார். அல்லு அர்ஜுனுக்கு அமலாபாலுடன் திருமணம் நிச்சயமான செய்தி வரை டைரியில் எழுதப்பட்டிருந்தது.. இதன் பிறகு இவ்விருவருக்கும் திருமணம் ஆனதா ?? ஆகவில்லையா ?? என்ற கேள்விக்கு விடையறிய அல்லு அர்ஜுனை நாடுகிறார். 

பறவைகளை தன் வீடியோ கேமராவில் அமலாபால் பதிவு செய்ய, வில்லன் செய்த ஒரு கொலையும் எதேச்சையாக அதில் பதிவாகிறது. இதனால் வில்லன்களால் அமலா பால் கொல்லப்படுகிறார். நிச்சயம் செய்யப்பட்டுள்ள காத்ரின், அல்லு அர்ஜுனின் சோகக் கதையை கேட்டு அனுதாபம் கொண்டு பின்பு காதலிலும் விழுகிறார். இறுதியில் இறந்ததாக எண்ணப்பட்ட அமலாபால் உயிருடன் வர க்ளைமாக்ஸில் ஏகப்பட்ட ட்விஸ்டுகள்.

கலர் கலராக காஸ்ட்யூம்கள், மாசு கிளப்பும் கார்கள், நீண்ட தாடியும் நீள முடியும் வைத்த வில்லன்கள் என்ற மாஸ் படத்திற்கு அமைத்திருந்த டெம்பிளேட்டிலிருந்து விலகி, மிக ஸ்டைலிஷாக அமைக்கப்பட்டிருந்த விதம் முதல் ஹைலைட். தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணியும் பாடல்களும் இனிமையான பதிவு, குறிப்பாக வெஸ்டர்னும் கர்நாடக சங்கீதமும் சேர்ந்த சங்கராபரணம் பாடல். ‘ஒன் ஒன் பாடலிலும், டாப் லேச்சு போயாலி பாடலிலும் அல்லு அர்ஜுனின் நடனம் டாப் டக்கர். இன்டர்வல் பிளாக்கிற்கு முன் வருகின்ற சண்டைக் காட்சி இந்தியன் சினிமாவில் படமாக்கப்பட்ட மிகச்சிறந்த சண்டைக்காட்சிகளில் ஒன்று எனக் கூறினால் அது மிகையல்ல. ‘ பிடில் பிரம்மாவாக ‘ பிரம்மானந்தம் காமெடியில் அசத்துகிறார். 

அல்லு அர்ஜுனின் அசத்தலான நடனமும் கண்ணாலேயே கொலை செய்ய கணக்குபோடும் வன்ம விழிகளும் இவரது கதாபாத்திரத்திற்கான தோரணையை சேர்க்கிறது. இவருடன் ஆடும் போது அமலா பால் சாதாரணமாகத் தான் தெரிகிறார். ஒன்றுக்கு இரண்டாக காத்ரின் அமலாபால் என இரு நாயகிகள். அமலாபாலை விட காத்ரின் தான் மனதில் பதிகிறார் நடிப்பிலல்ல கிளாமரில். 

மாடர்ன் உலகத்தில் ஸ்கைப் காலிலே நிச்சயதார்த்தம் செய்து கொள்வது, கிட்டாரை பெண்ணின் உடலாக வர்ணிக்கும் காட்சிகளில் பூரி ஜகன்நாத் ரசிக்க வைக்கிறார். இன்டர்வல் வரை காதல் காமெடி என அழகாக பயணம் செய்யும் படம், இடைவேளைக்குப் பிறகு வழக்கமான பழிவாங்கும் பாதையில் வியக்கத் தக்க அம்சங்கள் ஏதுமின்றி , நாம் எதிர்பார்த்தவாறே பயணிப்பது ஸ்வாரஸ்யத்தைக் குறைத்து, கடைசியில் இதுவும் வழக்கமானதெலுங்கு படம்தான் என்று தோன்ற வைத்துள்ளது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget