எளிதாக ஜோதிடம் கற்பது எப்படி - பாகம் 11

இந்திய ஜோதிடவியலின் 3 தூண்கள்  -3 Pillars of Indian Astrology

இந்திய ஜோதிடம் கிரகம், நட்சத்திரம், ராசி என்ற 3 விஷயங்களை அடிப்படை தூண்களாக வைத்தே அமைக்கப்பட்டுள்ளது. மற்ற எல்லா ஜோதிட விஷயங்களும் இம்மூன்றின் மேல் நுட்பத்துடன் கட்டப்பட்டு,
அலங்கரிக்கப்பட்ட கட்டிடமே.

கிரகங்கள் 9, நட்சத்திரங்கள் 27, ராசிகள் 12 இவைகளைப் பற்றிய முழு விபரங்களையும் ஒருவர் நன்கு அறிந்து, கணித்து, அதன் பயன்பாடுகளை ஜாதகத்திற்கு ஏற்றவாறு பலன் சொல்லத் தெரிந்தால் அவரே ஒரு சிறந்த ஜோதிடர் ஆவார்.

ஜோதிடம் என்பது ஒரு பெருங்கடல் என்றும், அப்பெருங்கடலை கடப்பது அவ்வளவு எளிதல்ல, அதை எல்லோராலும் கற்க, புரிந்து கொள்ள இயலாது என்றும் அதைக் கற்றுணர்ந்த சிலர், பலரிடம் சொல்லி பயமுறுத்தி வருகின்றனர். சிறிய வயதிலிருந்தே நமக்கு அவ்வாறு சொல்லி பழக்கப்படுத்திவிட்டதால் நமக்கு அவ்வாறு தோன்றுகிறது.

பெருங்கடலை கடக்க நமக்கு 3 அடிப்படை விஷயங்களே தேவை. படகு, துடுப்பு, படகோட்டி. ராசி என்னும் படகை, நட்சத்திரம் என்ற துடுப்பைக் கொண்டு, சரியான திசையில் செலுத்தும் படகோட்டியே கிரகமாகும்.

எப்படி படகு, துடுப்பு, படகோட்டி ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவைகளோ அதைப் போல கிரகம், நட்சத்திரம், ராசி இவைகள் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன.

அவைகள் எப்படி தொடர்புடையன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget