சௌந்தர்யாவிடம் சாதுர்யமாக சொன்னார் சூப்பர் ஸ்டார்!


நடிகர் ரஜினிகாந்த், இந்தி நடிகை தீபிகா படுகோனே, ஆதி ஆகியோர் நடித்துக்கொண்டிருக்கும் படம் கோச்சடையான். ரஜினியின் மகள் சௌந்தர்யா, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் வழிகாட்டுதலோடு இயக்கிகொண்டிருக்கும் இந்த படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

சமீபத்தில் தீபிகா படுகோனே ரஜினியை அப்பா என்று கூறியிருந்தார். தன்னைவிடா இரண்டு மடங்கு வயது பெரியவராக இருந்ததாலும், அதிக மரியாதையும் அன்பும் வைத்திருந்ததாலும் அவர் அப்படி கூறியிருந்தாராம். இந்நிலையில் கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா நடிப்பதால் தனக்கும் தீபிகாவுக்கும் இடையே படத்திலும், பாடலிலும் வரும் நெருக்கமான காட்சிகளை தவிர்க்குமாறு தனது மகளும், படத்தின் இயக்குனருமான சௌந்தர்யா அஸ்வினிடம் ரஜினி கேட்டுக்கொண்டாராம். 


மேலும் தீபிகா கோச்சடையான் படத்தில் பரதநாட்டியம் ஆடுகிறார். இதற்காக ஒரு சிறப்பு நடன இயக்குனரை வைத்து தீபிகா பரதநாட்டியம் ஆடும் காட்சிகளை கேரளாவில் படமாக்கியிருகிறார்கள். 


தீபிகா தனது முதல் பாலிவுட் படமான ஓம் சாந்தி ஓம் படத்தில் பரதநாட்டியம் ஆடியிருந்தார். அதன்பிறகு இந்த படத்தில் தான் பரதநாட்டியம் ஆடுகிறார். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget