முன்னாள் கனவுக்கன்னி கலக்கும் லக்கா, கிக்கா!


லக்கா, கிக்கா எனப்படும் புதுமையான கேம் ஷோ மூலம் கலக்கலாக களம் இறங்கியுள்ளார் முன்னாள் கனவுக்கன்னி ரோஜா. அவருடைய அழகான உடை அலங்காரம், கேள்விகளை கேட்கும் மேனரிசம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளித்திரையில் ஜொலித்த நட்சத்திரங்கள் சின்னத்திரைக்கு வருவது புதிய விசயமல்ல. சிலர் கதாநாயகியாக நடிப்பார்கள். சிலர் நிகழ்ச்சி நடத்துவார்கள்.
அந்த வரிசையில் ரோஜாவும் களம் இறங்கியுள்ளார். இவர் ஜீ தமிழ் டிவியில் ‘லக்கா, கிக்கா’ என்ற கேம் ஷோவை தொகுத்து வழங்குகிறார்.


வழக்கமான ஜாக்பாட் நிகழ்ச்சி போன்று இல்லாமல், முற்றிலும் வித்தியாசமான முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. நான்கு சுற்றுக்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சியில் முதல் கேள்வியை ரோஜா கேட்பார். அதற்கு பார்வையாளர்கள் வி‌டை சொன்னால் அப்போதே கையில் ரூ.5 ஆயிரம் பரிசு கிடைக்கும்.


2 வது சுற்று திறமைக்கான போட்டி. பாடத்தெரிந்தவர்கள் ஆடத்தெரிந்தவர்கள் மேடையேறி ஆடலாம். அப்போது கிளி ஒவ்வொருவருக்கும் ஒரு சீட்டெடுக்கும். அந்த சீட்டில் வருகிற பரிசுத்தொகையை அப்போதே ரோஜா வழங்குகிறார்.


3வது சுற்று ஏலம் விடும் நிகழ்ச்சி. 4 வது இறுதி சுற்றை எட்டுபவர்களுக்காக 3 பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு பொம்மையில் மட்டும் அதிக தொகை இருக்கும். இதில் ஒரு பொம்மையை தேர்ந்தெடுத்து தங்களுக்கான தொகையை பெற்றுக் கொள்ளலாம்.


முற்றிலும் வித்தியாசமான முறையில் நடக்கும் இந்த நிகழ்ச்சி திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இரவு 9.30மணிக்கு ஜீ தமிழ் டி.வியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது ஜெயா டிவியில் சிம்ரன் நடத்தும் ஜாக் பாட் நிகழ்ச்சிக்கு பலத்த போட்டியாக உருவாகும் என்று நேயர்கள் மத்தியில் இப்போதே ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.


அப்பட அடுத்த 'ஜாக்கெட்' சண்டை ரெடி... !

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget