சென்னை பாக்ஸ் ஆபிஸில் அலெக்ஸ் பாண்டியனைவிட ஒரு மடங்கு அதிகம் வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது சந்தானத்தின் கண்ணா திருட்டு லட்டு தின்ன ஆசையா.
3. சமர்
கடந்த வெள்ளி, சனி ஞாயிறில் சமர் 46 லட்சங்களை வசூலித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. சோட்டா நடிகர்களின் படங்களே கோடிகளை அனாயாசமாக தாண்டும் போது ஞாயிறுவரை
95.7 லட்சங்களை மட்டுமே சமர் வசூலித்துள்ளது வருத்தத்துக்குரியது.
2. அலெக்ஸ் பாண்டியன்
ஆர்ப்பாட்டமாக முதல் ஆறு நாட்களில் மூன்று கோடியை தாண்டிய அலெக்ஸ் பாண்டியன் அடுத்த மூன்று தினங்களில் - 18,19,20 தேதிகளில் 68.3 லட்சங்களையே வசூலித்து தடுமாறுகிறது. இதன் மொத்த வசூல் 3.94 கோடிகள். இப்படியேப் போனால் ஐந்து கோடிக்குள் பாண்டியர் பஞ்சராவது உறுதி.
1. கண்ணா திருட்டு லட்டு தின்ன ஆசையா
காமெடியர் சந்தானத்தின் திருட்டு லட்டு வார இறுதியில் 1.32 கோடியை வசூலித்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. நாளுக்குநாள் இந்தப் படத்தின் வசூல் எகிறினாலும் அடுத்த வாரம் விஸ்வரூபம் வெளியாவதால் முதலிடத்தை இழப்பது உறுதி. ஞாயிறுவரை இதன் சென்னை வசூல் 3.21 கோடிகள். திருட்டு மாங்காய் மாதிரி திருட்டு லட்டின் சுவையும் தனித்துவமானதுதான்.