எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வழங்க ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் படம் தேசிங்குராஜா. இதில் நாயகனாக விமல், நாயகியாக பிந்து மாதவி நடிக்கின்றனர். சூரி, சார்லி, சிங்கம்புலி, சிங்கமுத்து, ரவிமரியா, சாம்ஸ், ஆடுகளம் நரேன் வி.ஞானவேல், வடிவுக்கரசி, அப்பத்தா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி எஸ்.எழில் இயக்குகிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் தயாராகிறது என்றார் அவர்.
இந்த படத்துக்காக சமீபத்தில் அம்மாடி அம்மாடி அய்யோடி அய்யோடி நெருங்கி ஒரு தடவை பார்க்கவா என்ற பாடல் காட்சி பதினைந்து லட்சம் ரூபாய் செலவில் பழகுடோன் அரங்கு அமைத்து படமாக்கப்பட்டது. இதில் விமல், பிந்து மாதவி பங்கேற்று நடனம் ஆடினார்கள். பத்து நாட்கள் இக்காட்சி படமாக்கப்பட்டது.
வசனம்: ராஜசேகர், ஒளிப்பதிவு: சூரஜ் நல்லுசாமி, இசை: இமான், பாடல் : யுகபாரதி, எடிட்டிங்: கோபி கிருஷ்ணா, நடனம்: தினேஷ், தினகா, பிருந்தா, ஸ்டண்ட்: திலீப் சுப்பராயன், தயாரிப்பு மேற்பார்வை: சங்கரதாஸ், தயாரிப்பு நிர்வாகம்: ராஜா.