கருவில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே அனைவரும் ஆவலுடன் தெரிந்து கொள்ள விரும்புவது குழந்தை ஆணா, பெண்ணா என்பதுதான். உங்களின் உடல் அமைப்பு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்ளலாம். கர்ப்பிணிகளின் சருமமும், முகமும் பளபளப்பாக இருந்தாலே கருவில் உள்ள குழந்தை பெண் குழந்தைதான் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறக் கேட்கலாம். கர்ப்பிணிகளின் கண்ணக் கதுப்பு
ரோஸ், அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் பூரிப்பாய் இருக்குமாம். அதேபோல் கர்ப்பிணிகளின் எடையும் சற்று அதிகமாய் இருக்கும்.
கர்ப்பிணிகள் அனைவருக்குமே வாந்தி, மயக்கம் ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் கருவில் உள்ளது பெண்குழந்தை என்றால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவது குறைவாகவே இருக்குமாம். பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு புளிப்புதான் விருப்பமான உணவாக இருக்கும்.
ஆனால் பெண் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணிகளுக்கு இனிப்பு உணவு என்றால் மிகவும் பிடிக்குமாம். கர்ப்பத்தில் உள்ள பெண்குழந்தைக்கு இனிப்பு அதிக விருப்பம் என்பதால் தாய்க்கும் அது விருப்பமான உணவாக உள்ளதாக பிரசவம் பார்க்கும் பெண்கள் கூறுகின்றனர். கருவில் உள்ள குழந்தைக்கு இதயத்துடிப்பு அதிகம் இருக்கும்.
ஒரு நிமிடத்திற்கு 140 முறை துடிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உங்கள் குழந்தையின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 140 ஆக உள்ளதாக சந்தேகமே வேண்டாம் அது பெண் குழந்தைதான் என்று அவர்கள் கூறுகின்றனர். கர்ப்பிணிகளே உங்கள் உடல் அமைப்பு, உங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை வைத்து ஆண் குழந்தையா, பெண்குழந்தையா என்பதை தெரிந்து கொள்ளுங்களேன்.