ஏற்கனவே வெளியாகி, ஹாலிவுட்டில் வசூலை குவித்த, "பாஸ்ட் பைவ் என்ற படத்தின், தொடர்ச்சி, இது. குற்றம் செய்வதையே தொழிலாக கொண்டுள்ள, சர்வதேச அளவில் பிரபலமான கொள்ளையர்களை கொண்ட ஒரு குழு, திருந்தி வாழ முயற்சிக்கிறது. ஆனால், அவர்கள் மீதுள்ள குற்ற வழக்குகள், இதற்கு பெரும் தடையாக உள்ளன. அவர்களுக்கு உதவ முன் வருகிறார், அமெரிக்காவைச் சேர்ந்த, புலனாய்வு நிறுவன அதிகாரி. இதற்கு பதிலாக, பிரிட்டனை சேர்ந்த, பிரபலமான
கொள்ளை கும்பல் குறித்த தகவல்களை, அந்த அதிகாரிக்கு, இந்த மாஜி கொள்ளை கும்பல் தர வேண்டும். இதனால் ஏற்படும் விளைவுகளை, அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் படமாக்கியுள்ளார், இயக்குனர், ஜஸ்டின் லின். பிரபல ஹாலிவுட் நடிகர், வின் டீசல், கொள்ளை கும்பல் தலைவனாக நடித்துள்ளார். பால் வாக்கர், ஜோர்தனா பிரேவ்ஸ்டர், டைரஸ் கிப்சன் உள்ளிட்டோரும், இந்த படத்தில் நடித்துள்ளனர்.