முதல் படமான, "கடல் கை விட்டதால், கவலையடைந்த துளசி, தற்போது அதிலிருந்து மீண்டு, தன் அடுத்த படத்தில், தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஜீவா ஜோடியாக, "யான் படத்தில் நடிக்கும், துளசிக்கு, இதில், செமத்தியான கேரக்டராம்.வில்லத் தனம் கலந்த ஹீரோயின் கேரக்டர் என, கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. கிளாமர், டூயட் என, சராசரியான ஹீரோயின்களை
போல் இல்லாமல், இரண்டாவது படத்திலேயே, மாறுபட்ட நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும், வித்தியாசமான கேரக்டர் கிடைத்திருப்பதால், உற்சாகமாக இருக்கிறார், துளசி.இந்த படம், ஹிட்டாகும் என, நம்பிக்கையுடன் இருக்கும் துளசி, இதற்கு அடுத்தபடியாக, தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், நம்புகிறார்.