1. எதிர்நீச்சல்
சிவ கார்த்திகேயன், அனிருத், தனுஷ் கூட்டணி அதிக ரசிகர்களை ஈர்த்ததில் வியப்பில்லை. படமும் ஏமாற்றவில்லை. மே 1 வெளியான படம் ஐந்து தினங்களில் 1.9 கோடியை வசூலித்து முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.
2. சூது கவ்வும்
மே 1 வெளியான படம் மே 5 வரை 1.41 கோடியை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. படத்தின் ப்ரெஷ்ஷான கதாபாத்திரங்களும், காட்சிகளும் வரும் நாட்களில் வசூலின் அளவை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.
3. உதயம் என்எச் 4
மூன்று வாரங்கள் முடிவில் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் 3.8 கோடிகளை வசூலித்திருக்கும் இப்படம் வார இறுதியில் 11.4 லட்சங்களையும், வார நாட்களில் 45.6 லட்சங்களையும் வசூலித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
4. மூன்று பேர் மூன்று காதல்
அழுத்தமான இரு காதல் கதைகளை எடுத்துக் கொண்ட வஸந்த் அதனை சொல்லியிருக்கும் விதத்தில் கோட்டைவிட்டிருக்கிறார். விமலின் அழுத்தமில்லாத மூன்றாவது காதல் கதையும் படத்தின் மைனஸ். மே 1 வெளியான இப்படம் மே 5 வரை 31.6 லட்சங்களை வசூலித்துள்ளது.