வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்


மலிவு விலை வரப்பிரசாதமாக மனிதர்களுக்கு வாய்த்திருக்கிறது, வாழைப்பழம். வாழைப்பழம் நமக்கு அளிக்கும் நன்மைகள் அனேகம். அவை பற்றி... 

* வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தரக்கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகின்றன. வைட்டமின் ஏ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. 

* பொட்டாசியம், நார்ச்சத்துகள், மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகின்றன. அதிக அளவில் கார்போஹைட்ரேட் உள்ளது. கொழுப்பு இல்லை. 

* வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது.டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்குச் சாந்த குணத்தை ஏற்படுத்துகிறது. டிரைப்டோபென் நியாசினாக மாற்றம் அடைந்து, உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது. 

* நம்முடைய உடலை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள வாழைப்பழம் மிகவும் உதவுகிறது. மூளையில் வேதியியல் பொருட்களை சமநிலையில் வைத்துக் கொள்ள பெரிதும் துணை புரிகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. 

* நல்ல மனநிலைக்கு வாழைப்பழம் உதவி புரிகிறது. நரம்புகளை சீராக வைத்துக்கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும், இதய இயக்கத்தையும் சீராக வைத்திருக்கிறது. 

* நம் உடலில் சுரக்கும் திரவங்களை வாழைப்பழம் சமநிலைப்படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும், நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்துக்கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கின்றன. 

* வாழைப்பழம் நமது உடலில் நோய் நீக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ, தேன் கலந்து சாப்பிட்டாலோ வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். 

* ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வாழைப்பழம் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. 

* வாழைப்பழத்தை நமது உணவின் ஒரு பகுதியாகச் சாப்பிட்டு வருவதன் மூலம், பக்கவாத பாதிப்பு அபாயத்தை 40 சதவீதம் அளவுக்குக் குறைக்கலாம் என்று ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget