ஸ்மார்ட் ஃபோன் பிரிவில் உலகின் தலையாய நிறுவனமாக விளங்கி வரும் சாம்சங் நிறுவனம் தனது காலக்ஸி கிராண்ட் குவாட்ரோ ஸ்மார்ட் ஃபோனை ரூ.17,290-க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. 4.7 இன்ச் டிஸ்பிளே, டியூயல் சிம், 1.2ஜிகாஹெர்ட்ஸ் குவாட் புராசசர், 4.1.2 (ஜெல்லி பீன்) ஆண்டிராய்ட் ஆபரேட்டிங் சிஸ்டம், 5 மெகா பிக்சல் கேமரா, மெமரி 8ஜிபி. ஆகியவை இதன் சிறப்பம்சமாகும். இந்த ஸ்மார்போன் அறிமுகம் மூலம் ரூ.5,990 முதல் ரூ.41,500 வரையிலான விலை கொண்ட 14 வகை
ஸ்மார்ட் போன்களை சாம்சங் தன்னுடைய கையிருப்பில் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் சாம்சங் தெரிவித்தது என்னவெனில், இந்தியாவில் சாம்சங் அறிமுகம் செய்யப்பட்ட தினத்திலிருந்து 1 கோடி காலக்ஸி உபகரணங்களை இந்தியாவில் விற்றுள்ளதாம்.