அதென்னமோ தெரியவில்லை... தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் நாயகிகள் சீக்கிரமே விலைமாது வேடம் போடத் துடிக்கிறார்கள். முன்பெல்லாம் ரிடையர்மெண்ட் நேரத்தில்தான் இந்த வேடத்துக்கு வருவார்கள் அல்லது புரட்சிப் பெண்ணாக நடிப்பார்கள். குறிப்பாக சமீப படங்களில் டாப் ரேஞ்சில் இருக்கும் நடிகைகள் கூட இந்த வேடம்தான் வேண்டும் என்று விரும்பி ஏற்கிறார்களாம்.
பழைய நடிகைகளில் சரிதா இந்த வேடத்தில் நடித்தார். அது ரஜினி நடிப்பில் கே பாலச்சந்தர் நடித்த தப்புத் தாளங்கள். இதில் ரஜினி - சரிதா இருவரின் நடிப்புமே க்ளாஸ் ரகமாக இருந்தது.
சமகாலப் படங்களை எடுத்துக் கொண்டால், செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்தில் சினேகா விலை மாது வேடத்தில் நடித்து பாராட்டு பெற்றார்.
ரீமா சென் இப்போது திருமணம், குழந்தை என செட்டிலாகிவிட்ட ரீமா சென்னும் பாலியல் தொழிலாளி வேடம் போட்டார். ஆனால் இது வங்காள மொழிப் படம். தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.
சிம்பு நடித்த வானம் படத்தில் விலைமாதுவாக மாறியவர் அனுஷ்கா. செக்கச் செவேல் லிப்ஸ்டிக்கும் தொப்புளுக்குக் கீழே புடவையுமாக கவர்ச்சியில் கிறங்கடித்தார்.
அடுத்து ஸ்ரேயாவின் முறை. சிவாஜி படம் மூலம் உச்சத்துக்குப் போன ஸ்ரேயா, இப்போது தெலுங்கில் மட்டும்தான் நடிக்கிறார். பவித்ரா என்ற படத்தில் அவர் விலைமாது வேடத்தில் வருகிறார்.
மேலே சொன்ன நடிகைகளாவது நடிக்க வந்து பெரிய ரேஞ்சுக்குப் போய்விட்ட பிறகு விலைமாது வேடத்தில் வந்தார்கள். ஆனால் ஸ்ருதிஹாஸன் இன்னும் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கக் கூட இல்லை. தமிழ், தெலுங்கு, இந்தி என ஆங்காங்கே பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கும் அவர், இப்போது ஒரு இந்திப் படத்தில் முழுக்க முழுக்க விலைமாது வேடம் ஏற்றுள்ளார்.