பெண்களை தாக்கும் கழுத்து நோய்கள்


தைராய்டு நம் கழுத்துப் பகுதியில் அமைந்திருக்கக் கூடிய ஒரு சுரப்பி. இது நாளமில்லா சுரப்பிகளுள் ஒன்று. தைராய்டு அதிகமாக வேலை செய்தாலோ அல்லது குறைவாக வேலைச் செய்தாலோ சிக்கல்கள் உண்டாகிறது. குறைவாக வேலைச் செய்தால் குறை தைராய்டு என்றும் அதிகமாக வேலை செய்தால் மிகை தைராய்டு என்றும் கோளாறுகள் உருவாகின்றன. 

இதிலிருந்து சுரக்கிற தைராக்ஸின் என்கிற முக்கிய ஹார்மோன் நீர்தான் நமது உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் ஊட்டமளிக்கிறது. ஆண், பெண் உறுப்புக் முதிர்ச்சி பெறவும் இதுதான் உதவுகிறது. தைராண்ட நோய்களால் பாதிக்கப்படும் 10 நோயாளிகளுள் 8 பேர் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். 

இதற்குப் பெண்களின் ஹார்மோன்களையும் அவர்களது உடலமைப்பு காரணமாகச் சொல்லலாம். மாரடைப்பை எடுத்துக் கொண்டால் அதனால் மிகுதியாக தாக்கப்படுகிறவர்கள் ஆண்களாக இருக்கிறார்கள். அதே போல இரத்த அழுத்தம், அதிலும் ஆண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது போல இந்த தைராய்டு கோளாறுகளால் பெண்கள் அதிக அளவில் நோய்க்கு ஆளாகிறார்கள். 

குறை தைராய்டு கோளாறுகளால் சோம்பேறித்தனம், அசதி, அதிக தூக்கம் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. மாத விலக்குத் தொந்தரவுகள் தொல்லை தரும். பொதுவாக உடல் எடை கூடிக் கொண்டே போகும். "காய்ட்டர்'' என்கிற தைராய்டு வீக்கம் கழுத்தில் ஏற்படும், கை, கால் வலி, மூட்டு வலி, மலச்சிக்கல் தோன்றும். கருத்தரிப்பதில் கூட தடை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. 

முடி கொட்டிப் போகும் அபாயம் உண்டு. ஆனால் மிகை தைராய்டு கோளாறால் பாதிக்கப்பட்டவர் எப்பொழுதும் டென்ஷனாகப் படபடப்புடன் இருப்பார்கள். கண் முழிகள் பிதுங்கி வெளியே தெரியலாம். மாத விலக்குத் தொந்தரவுகள் ஏற்படலாம். குடும்ப உறவில் நிறைய சிக்கல்கள் ஏற்படலாம். அதனால் விவாகரத்து வரைப் போக நேரிடுகிறது. 

இதில் தொண்டை வலி வர அதிக வாய்ப்பில்லை. தைராய்டு சுரப்பி பெரிதாகி பலூன் மாதிரி உணவு குழாயைத் தடுக்கும் போது தொண்டை வலி ஏற்படலாம். குழந்தைகளையும் இது தாக்குகிறது. குழந்தைகள் பிறந்ததிலிருந்து வயதுக்கேற்ப அதன் நடவடிக்கைகளில் முன்னேற்றங்கள் தோன்ற வேண்டும். 

உதாரணமாக கைகளைப் பற்றுவது, தாயின் குரலைக் கேட்டால் திரும்பிப் பார்ப்பது போன்ற அதன் முன்னேற்ற நடவடிக்கைகள் தைராய்டு கோளாறுகளால் பாதிக்கப்படும். வயதுக்கேற்ற செயல்பாடுகளில் மந்த நிலை ஏற்படும். இது மாதிரி நேரிட்டால் உடனே கவனத்துடன் குழந்தையை பரிசோதிப்பது அவசியம். 

அப்படியே விட்டு விட்டால் குழந்தை வளர்ச்சியிழந்து மந்த புத்தியுடனேயே இருக்க வேண்டும். தைராண்ட நோய்க்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. பாக்டீரியாக் வைரஸ்கள் காரணமாகின்றன. நம் பெற்றோர்கள் யாருக்காவது இந்நோய் இருந்தால் அதுவும் நம்மை தொடர்ந்து தாக்கும் வாய்ப்புகள் உள்ளன. 

எனவே சர்க்கரை நோயைப் பரிசோதித்து அறிந்து கொள்வது போல இதையும் பரிசோதித்து தெரிந்து கொள்வது நல்லது. இளம் வயதில் கழுத்தில் புற்று நோய் தாக்கி கதிரியக்க சிகிச்சை பெற்றிருந்தால் நாளடைவில் தைராய்டு பாதிப்புகள் வரலாம். நம் உணவில் அயோடின் குறைவை ஒரு காரணமாகக் சொல்லலாம். 

மலையடிவாரத்தில் வாழும் மக்கள் போன்றவர்களுக்கு இயற்கையிலேயே அயோடின் குறைபாடு இருக்கும் அவர்களை இந்நோய் தாக்கலாம். தைராய்டு பாதிப்பு மிக மெதுவாகவே ஏற்படுவது போலவே இந்நோய் அகலுவதற்கும் நீண்ட நாள் பிடிக்கும். நோயின் பாதிப்பைப் பொறுத்து மருத்துவ சிகிச்சை தரப்படுகின்றன. 

"ஐசோடோப்'' எனப்படும் அணுவியல் சிகிச்சை இன்று வேகமாக வளர்ந்து வருகிறது. இம்முறையில் நோய்களைக் கண்டு பிடித்து குணமாக்க முடியும். கதிர் இயக்கத் தன்மையுடைய இம் மருந்தை வாய் வழியாகச் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget