ஆளில்லாத க்ரவுண்டில் கம்பு சுற்றுவதை விட, எதிராளிக்கு முன்பு கம்பு சுற்றுவதில்தான் ஒரு திரில் இருக்கும். ஒரு பரபரப்பு இருக்கும். அதை நிகழ்த்திக்காட்ட விஜய், சூர்யா, தனுஷ் மூவரும் அடுத்த மாதம் களமிறங்குகிறார்கள். விஜய் நடித்துள்ள தலைவா படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், அப்படத்தை அவரது பிறந்த நாளான ஜூன் 22-ந்தேதி அன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், தனுஷ் இந்தியில் நடித்துள்ள ராஞ்சனா என்ற படம் தமிழில் அம்பிகாவதி என்ற பெயரில் ஜூன் 21-ந்தேதி திரைக்கு வருகிறது.
ஆனால், இவர்கள் இருவருக்கும் முன்னதாக, ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம்-2 ஜூன் 14-ந்தேதியே வெளியாகிறது. இப்படி மூன்று பிரபல நடிகர்களின் படங்களும் ஒரே மாதத்தில் திரைக்கு வருவதால், முக்கிய தியேட்டர்களை கைப்பற்றுவதில் படங்களை வெளியிடும் கம்பெனிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.