இடுகைகள்

மார்ச் 21, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரேபிய குச்சி சிக்கன்

படம்
சிறு குழந்தைகள் லாலிபாப் குச்சி மிட்டாய் சாப்பிடுவதே அழகு தான். கோழி இறைச்சி துண்டுகளை, இதேபோல குச்சியில் செருகி சாப்பிட கொடுத்தால், ஆசையாய் குழந்தைகள் சாப்பிடுவர். காரம் இல்லாத அரேபிய குச்சி சிக்கன் செய்ய தேவையானவை: எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம் பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று குடைமிளகாய் - ஒன்று மிளகுப் பொடி - ஒரு ஸ்பூன் கடுகுப் பொடி - ஒரு ஸ்பூன் (கடைகளில் கிடைக்கும்) தயிர் - 50 மில்லி உப்பு - தேவைக்கேற்ப எலுமிச்சை சாறு - அரை மூடி எண்ணெய் - வதக்கும் அளவிற்கு நீளமான குச்சி (சாஸ்டிக்) - இரண்டு (கடைகளில் கிடைக்கும்) செய்முறை: சிக்கன், வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை ஒரே அளவான சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இவற்றுடன், மேற்குறிப்பிட்ட அனைத்து பொடி வகைகள், உப்பு, தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி லேசாக காயவிட வேண்டும்.நீளமான குச்சியில் சிக்கன், வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை ஒன்றன் பின் ஒன்றாக செருகி, தோசைக்கல்லில் வேகவிட வேண்டும். சதுர துண்டுகளாக இருப்பதால், நான்கு பக்கமும் திருப்பி வே...

கம்ப்யூட்டர் விலை உயருமா?

பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்புக்குத் தேவையான முக்கிய பாகங்களுக்குக் 5% எக்சைஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெர்சனல் கம்ப்யூட்டர் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வரி உயர்வினைத் தங்கள் லாபத்தில் ஈடு கட்டி, நிறுவனங்கள் இவற்றின் விலையை உயர்த்தாமலேயே இருக்கவும் வாய்ப்பு உள்ளது. மைக்ரோப்ராசசர், டிவிடி ரைட்டர், சிடி ரைட்டர், பிளாப்பி டிஸ்க் ட்ரைவ், பிளாஷ் ட்ரைவ் ஆகியவற்றிற்கு முன்பு எக்சைஸ் வரி விதிக்கப்படவில்லை. தற்போது விதிக்கப்பட்ட 5% வரியினால், பெர்சனல் கம்ப்யூட்டர் விலையை உயர்த்துவதா, இல்லையா என நிறுவனங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. இந்த வரிவிதிப்பு இந்தியாவில் தயாரிக்கப்படும் சாதனங்களுக்கு விதிக்கப்படுவதால், இவற்றை ஏற்றுமதி செய்திடும் நிறுவனங்களுக்கும், மற்றவற்றிற்கும் இதில் போட்டி நிலவும். மேலும் இங்கு இவற்றைத் தயாரிக்க தொழில் பிரிவுகளை நிறுவத் திட்டமிடும் நிறுவனங்கள் இனி தயங்கலாம் என்று பரவலாக கருத்து நிலவுகிறது. இந்த வரி விதிப்பு குறித்த விபரங்கள் வந்த பின்னரே முழு நிலைமை தெளிவடையும்.

நெட்வொர்க் மற்றும் ஜி.எஸ்.எம்

நெட்வொர்க் (Network) :   தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக கம்ப்யூட்டர் களையும் சார்ந்த சாதனங்களையும் இணைத்து உருவாக்கப்படும் ஒரு வலைப் பின்னல். இது கம்பிகள் வழியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. வயர்லெஸ் நெட்வொர்க்குகளும் சாத்தியமே.   ஜி.எஸ்.எம். (GSM Global System for Mobile Communications):   இந்தியா, கிரேட் பிரிட்டன் உட்பட பல நாடுகளில் பெரிய அளவில் பயன்படுத்தப்படும் ஒரு மொபைல் போன் தொடர்பு தரும் சிஸ்டம். இன்னொரு மாற்றான சி.டி.எம்.ஏ. என்ற மொபைல் சிஸ்டம், இதைக் காட்டிலும் சிறப்பான தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்குவது என்றாலும், ஜி.எஸ்.எம். சிஸ்டம் தான் பெரும்பாலான இடங்களில் இயங்குகிறது. இந்தியாவில் இரண்டு சிஸ்டங்களும் இயங்குகின்றன. ஆனால், ஜி.எஸ்.எம். வகைதான் அதிக வாடிக்கை யாளர்களையும், நிறுவனங்களையும் கொண்டுள்ளது.

கம்ப்யூட்டருக்குப் புதியவரா? இல்லீகல் ஆப்பரேஷன்

படம்
கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக் கையில் சற்றும் எதிர்பாராத வகையில் கீழே காணும் செய்தி திரையில் தோன்றி அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் சாப்ட்வேர் தொகுப்பை கட்டாயமாக நிறுத்தச் செய்திடும்.   "This program has preformed an illegal operation and will be shut down". இது எதனால் ஏற்படுகிறது. இது பல காரணங்களாள் ஏற்படலாம். ஆனால் பெரும்பாலும் ஒரே நேரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டு சாப்ட்வேர் தொகுப்புகளால் தான் இந்த பிரச்னை ஏற்படுகிறது. பின்னணியில் இயங்கும் சாப்ட்வேர் தொகுப்பு ஒன்றின் ஏதாவது சில பைல்கள் நீங்கள் இயக்கும் சாப்ட்வேர் தொகுப்புடன் பிரச்னை செய்திடும்போது ஏதாவது ஒரு சாப்ட்வேர் இயங்க முடியாமல் முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். எனவே இது போன்ற சூழ்நிலையில் ஸ்டார்ட் பட்டன் அருகே உள்ள டாஸ்க் பாரில் அமர்ந்திருக்கும் புரோகிராம்களை மூடுவதன் மூலம் இந்த பிரச்னை தீரலாம்.   (மூடுவதற்கு அதனைத் திறக்க வேண்டியதில்லை. ரைட் கிளிக் செய்து அதில் உள்ள க்ளோஸ் பட்டனை அழுத்தினாலே போதும். இந்த வகையில் ரியல் ஆடியோ ப்ளேயர் இல்லாத சேட்டையெல்லாம் செய்து பல புரோகிராம்களை மூட வைக்கும்.)   இந்நில...

விண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட்கட் கீகள்

விண்டோஸ் மீடியா பிளேயரை நம்மில் பலரும் ஆடியோ மற்றும் வீடியோ பணிகளுக்குப் பயன்படுத்துகிறோம். இந்ததொகுப்பில் பல பயன்பாடுகளுக்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உள்ளன. நம் நேரத்தை மிச்சப்படுத்தி இசையை, பாடலை மற்றும் ஆடலை ரசிக்க இந்த ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம் ALT+1:   50 சதவிகித ஸூம் பக்கத்தைக் கொண்டுவர   ALT+2:   ஸூம் 100 சதவிகிதமாக்க ALT+3:   ஸூம் 200 சதவிகிதமாக்க ALT+ Enter:   வீடியோ காட்சியை முழுத்திரை யில் காண ALT+F:   மீடியா பிளேயர் பைல் மெனு செல்ல ALT+T:   டூல்ஸ் மெனு செல்ல ALT+P:   பிளே மெனு செல்ல ALT+F4:   மீடியா பிளேயரை மூடிவிட CTRL+1:   மீடியா பிளேயரை முழுமையான தோற்றத்தில் கொண்டு வர CTRL+2:   மீடியா பிளேயரை ஸ்கின் மோடில் கொண்டு வர CTRL+B : இதற்கு முன் இயங்கியதை மீண்டும் பிளே செய்திட CTRL+F:   வரிசையில் அடுத்த பைலை இயக்க   CTRL+E:   சிடி டிரைவில் இருந்து சிடி/டிவிடியை வெளியே தள்ள CTRL+P:   இயங்கிக் கொண்டிருக்கும் பைலை தற்காலிகமாக நிறுத்த / இயக்க CTRL+T:   இயங்கியதை மீண்டும் இயக்க CTRL+SHIFT+B:  ...

மைக்ரோசாப்ட் மேதமடிக்ஸ்

படம்
கிராபிகல் கால்குலேட்டர் ஒன்றைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு மைக்ரோசாப்ட் மேதமடிக்ஸ் 4 என்ற ஆட் ஆன் புரோகிராம் உதவுகிறது. இதில் நாம் கணிதச் செயல்பாடுகளை (equations) அமைக்கையில், ஒவ்வொரு நிலையாக அவை எப்படி செயல்படுகின்றன எனக் காணலாம். இதனால், இந்தச் செயல்பாடுகள் எப்படி கணக்கிடுதலை மேற்கொள்கின்றன என்பதைக் கண்டறி யலாம். இது கற்கின்ற மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.   மேலும் இந்த கால்குலேட்டரில் பல ஈக்குவேஷன்கள் பதியப்பட்டே கிடைக் கின்றன. குறிப்பாக ஜியோமெட்ரி மற்றும் கெமிஸ்ட்ரி பாடங்களுக்கானவை நிறைய கிடைக்கின்றன. நம் தேவைக்கேற்ப செட் செய்திட real and complex numbers, degrees, radians அல்லது gradians, ஆகிய பிரிவுகள் உள்ளன. மேலும் நமக்கு எத்தனை டெசிமல் இலக்கத்தில் விடை வேண்டும் என்பதனையும் செட் செய்து கொள்ளலாம்.   Area, pressure, temperature, velocity, time மற்றும் length ஆகிய பிரிவுகளுக்கான அலகுகளை மாற்றிக் கொள்ளவும் வசதி தரப்பட்டுள்ளது. இந்த புரோகிராம் கைகளில் எழுதுவதனை ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், ஒர்க்ஷீட் ஏரியாவில் நாம் நேரடியாகவே, ஈக்குவேஷன்களை எழுத...

எக்ஸெல் டிப்ஸ்

வரிசைகளில் தானாக டேட்டா அமைத்தல்   எக்ஸெல் ஒர்க்ஷீட்டின் செல்களின் அகலத்தினை சிலர் அழகாகக் காட்ட, ஒரு வரிசையினை இடை இடையே காலியாக விட்டு, டேட்டாவினை நிரப்புவார்கள். இதனை நாம் நிரப்புகையில் சரியாக இருக்கும். பொறுமையாக நாம் டேட்டாவினை இடுகையில், ஒவ்வொரு படுக்கை வரிசையினை விட்டுப் பின் அடுத்த வரிசையில் நிரப்புவோம். ஆனால் எக்ஸெல் தொகுப்பின் டேட்டா நிரப்பும் டூலினைப் பயன்படுத்தினால், அது வரிசையாகத்தானே நிரப்பும்.   எடுத்துக்காட்டாக பில் ஹேண்டில் என்ற ஒன்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஏதேனும் டேட்டாவை அப்படியே கீழ் உள்ள அனைத்து செல்களிலும் காப்பி செய்திட வேண்டி இருந்தாலும் அல்லது அடுத்தடுத்து சீரியல் வரிசையில் 1,2,3,4 என நிரப்ப வேண்டி இருந்தாலும் இந்த பில் ஹேண்டிலைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் நிரப்ப வேண்டிய செல்களில் ஹேண்டிலைப் பிடித்து இழுத்தாலே டேட்டா வரிசையாக நாம் தேர்ந்தெடுத்தபடி நிரப்பப்படும். இதில் ஒரு வரிசை விட்டு ஒரு வரிசை நிரப்ப வேண்டும் என்றால் என்ன செய்யலாம்? இதற்கு முதலிலேயே ஒரு சிறிய அட்ஜஸ்ட்மென்ட் செய்திட வேண்டும். பொதுவாக பில் இன் செய்வதற்கு முதலில் டேட்டா உள்ள...

ஓவூ - புதிய வீடியோ சேட்டிங் டூல்

படம்
வீடியோ வழி சேட்டிங் என்பது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்குத் தற்போதைய உலகின் டிஜிட்டல் சாதனமாக அமைந்துள்ளது. மிக எளிதாக இணையம் வழி ஒருவரை ஒருவர், அவர்கள் எத்தனை தூர இடைவெளியில் வசித்தாலும், தொடர்பு கொள்ள வீடியோ சாட்டிங் ஒரு வழியாக அமைந்துள்ளது. இந்த பிரிவில் அதிகம் பயன்படுத்தப்படுவது ஸ்கைப் சர்வீஸ் ஆகும்.   அண்மையில் இணையத்தில் அதே போன்ற இன்னொரு வீடியோ சேட்டிங் டூலைப் பார்க்க முடிந்தது. இதன் பெயர் ஓவூ (oovoo). இதில் பல டூல்கள் புதிய வசதிகளைத் தரும் வகையில் இணைக்கப்பட்டுள்ளன. ஆறு வழி வீடியோ காலிங் என்ற வசதி முதலாவதாக, இந்த டூல் மூலம் வழங்கப்படுகிறது. உலகின் எந்த மூலையில் இருப்பவருடனும், ஒரு சில நொடிகளில் தொடர்பு கிடைக்கிறது. இதனை   http://www.oovoo.com/ Download.aspx என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். இறக்கம் செய்யப்படும் பைல் ஒரு எக்ஸிகியூடிவ் பைலாக உள்ளது. இந்த பைலில் டபுள் கிளிக் செய்தால், நமக்கு எளிதாகப் பின்பற்றக் கூடிய செட் அப் விஸார்ட் கிடைக்கிறது. இதில் கேட்கப்படும் தகவல்களை அளித்து முடித்தவுடன், அக்கவுண்ட் ஒன்ற...

வேர்ட் டிப்ஸ்

வட்டமும் சதுரமும் சரியாக அமைய வேர்டில் சில தகவல்களை விளக்க நாமே சிறிய படங்களை டெக்ஸ்ட்டுடன் உருவாக்குவோம். இவற்றிற்கான வட்டங்களையும் சதுரங்களையும் வரைய வேர்ட் தொகுப்பில் சாதனங்கள் தரப்பட்டுள்ளன. ஆனால் பலரும் இதில் சற்று மனம் தளர்கின்றனர். எவ்வளவுதான் சரியாக மவுஸ் கொண்டு இழுத்தாலும் வட்டமும் சதுரமும் சரியாக அமையவில்லையே என குறைபட்டுக் கொள்கின்றனர். தேவையே இல்லை. இதற்கான சரியான கீகளைப் பயன்படுத்தினால் நாம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சரியாக வட்டமும் சதுரமும் அமையும். அது எப்படி என்று பார்க்கலாம். இந்த சூட்சுமம் ஷிப்ட் மற்றும் கண்ட்ரோல் கீகளைப் பயன்படுத்துவதில் தான் இருக்கிறது. முதலில் டிராயிங் டூல் பாரில் சரியான டூலைத் தேர்ந்தெடுங்கள். உடன் உங்கள் கர்சர் ஒரு கூட்டல் அடையாளம் ஆக மாறும். இப்போது நீங்கள் வரைய தயாராகிவிட்டீர்கள். வரையத் தொடங்குமும் ஷிப்ட் கீயினை அழுத்திக் கொள்ளுங்கள். கீ அழுத்துவது அப்படியே தொடரட்டும். இப்போது வரையத் தொடங்குங்கள். வித்தியாசம் தெரிகிறதா. ஆம். இதுவரை சரியாக வராத வட்டம், சதுரம் மற்றும் பிற உருவங்கள் நன்றாக வருகின்றனவா? ஓகே. ஏதேனும் ஒரு முறை ஷிப்ட் கீயை அழுத்தாம...

யூசர் நேம்/பாஸ்வேர்ட் சரியா?

படம்
இணையத்தில் நுழைந்து நம் விருப்பமான வெப்சைட்டிற்குள் நுழைய, நம் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைத் தருவோம். வழக்கமாக, உடனே இணைய தளம் திறக்கப்படும். நாம் நமக்குத் தேவையான தகவல்களைப் பெற முயற்சிப்போம். ஆனால், சில வேளைகளில் “Your Password or Username is Invalid. Please Try Again.” என்ற செய்தி வந்து நம் ஆசைத்தீயில் தண்ணீரை ஊற்றிவிடும். "அய்யோ! சரியாகத்தானே யூசர் நேம் மற்றும் பாஸ் வேர்டையும் அடித்தோம் என்ன வாயிற்று?' என்ற பதற்றம் பற்றிக் கொள்ளும். அந்த பதற்றத்திலேயே இன்னும் பல தவறுகளைச் செய்திடத் தொடங்குவோம். இன்டர்நெட் இணைப்பிற்காவது பரவாயில்லை; ட்ரெயின் டிக்கெட், பேங்க் அக்கவுண்ட் கையாளுதல், ஆன்லைனில் பொருட்கள் வாங்குதல் போன்றவற்றில் ஈடுபடுகையில் இந்த பிரச்னை வந்தால் நம் ரத்த அழுத்தம் இன்னும் எகிறும், இல்லையா? இந்த சூழ்நிலைக்கு நாம் தான் காரணம். எனவே இது போல லாக் இன் செய்திடுகையில் செய்யக் கூடாதவற்றையும் செய்ய வேண்டியவற்றையும் இங்கு காணலாம். செய்யக் கூடாதவை: 1. லாக் இன் செய்திடுகையில் "ஓகே' அல்லது "சப்மிட்' பட்டனை ஒரு முறை மட்டுமே தட்டவும்.   2.தட்டிய பின் மேற்கொண...

"சிடி' பாடல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்ற

படம்
அனைத்து ஆடியோ சிடியிலிருந்தும் பாடல்களை நம் கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியாது. மற்ற டேட்டா பைல்களை மாற்றுவது போல அனைத்து பாடல்களையும், கம்ப்யூட்டருக்குக் காப்பி செய்திட முடியாது. இதற்கு ஒரு  சுற்று வழி உண்டு. இதனை ரிப்பிங் (ripping) எனக் குறிக்கின்றனர்.   முதலில் இந்த “rip” என்ற சொல் சரியாக எதனைக் குறிக்கிறது? சிடி ஒன்றிலிருந்து டேட்டாவைக் காப்பி செய்து அவற்றின் பார்மட்டுகளை மாற்றி வேறு சிடி அல்லது டிவிடிக்குக் கொண்டு செல்வதனை ரிப்பிங் என்கிறோம். இன்றைய கம்ப்யூட்டர் பயனாளர்களிடம் இது பெரும்பாலும் மியூசிக் டேட்டா வினையே குறிக்கிறது. சிடியிலிருந்து இசைப் பாடல்களை வெளியே எடுத்து உங்கள் கம்ப்யூட்டரில் பதிவதுதான் ரிப்பிங். பொதுவாக இந்த பைல்கள் காப்பி ஆகையில் .wma என்ற பார்மட்டில் காப்பி ஆகும். ரிப்பிங் குறித்து தெரிந்து கொண்டால் சிடியிலிருந்து மட்டுமல்ல வேறு மீடியாக்களிலிருந்தும் இன்டர் நெட்டிலிருந்தும் பாடல்களை காப்பி செய்வது எளிதாகும். ரிப்பிங் செய்வதும் எளிதுதான். எப்படி என்பதை இங்கு பார்ப்போம். 1. முதலில் இதற்கு விண்டோஸ் மீடியா பிளேயர் பதிப்பு 10 அல்லது அதற்குப் பின் வந்தது இருக...

விண்டோஸ் 7 கிராஷ்!

விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் பல பயன்களினால், பெரும்பாலானவர்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். மேலும் புதிதாய்க் கம்ப்யூட்டர்கள் வாங்கும்போது, மைக்ரோசாப்ட் மற்ற நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தப்படி, விண்டோஸ் 7 சிஸ்டம் பதியப்பட்டே கிடைக்கிறது.   பொதுவாக, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து நாம் சந்திக்கும் பொதுவான குற்றச்சாட்டு, அது அடிக்கடி கிராஷ் ஆகிறது என்பதுதான். விண்டோஸ் 7 சிஸ்டம் தொடர்பாக இந்தக் குற்றச்சாட்டு அதிகம் இல்லை என்றாலும், சிலர் கிராஷ் ஆவதாகச் சொல்லி வருகின்றனர். கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், அது திடீரென கிராஷ் ஆனால், நமக்குப் பல வகைகளில் இழப்பு ஏற்படும். முக்கியமாக நாம் அமைத்த டேட்டா, டெக்ஸ்ட் மீண்டும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். இதனை உணர்ந்தே, மைக்ரோசாப்ட் நிறுவனம், image creation tool என்ற ஒரு டூலினைத் தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் வழங்கி உள்ளது. இதன் மூலம் நாம் விண்டோஸ் 7 சிஸ்டம் கிராஷ் ஆன பின்னர், ஓரளவிற்கு நம் இழப்பினைத் தவிர்க்கலாம்.   இமேஜ் உருவாக்குதல்: விண்டோஸ் 7 நன்றாகவும் சிறப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கையில், அதன் இமேஜ் ...

மரம் – கருங்காலி

படம்
மரங்கள்  மனிதனுக்கு ஆதார மானவையாகத் திகழ்கின்றன.  மரங்கள்தான் மனித இனத்தை வாழ வைக்கும் சக்திகளாக விளங்குகின்றன.  இதனால் தான் நம் முன்னோர்கள் கோவில்களில் தல விருட்சமாக மரங்களை வளர்த்து வணங்கினர். ஆனால் இன்று காடுகளில் உள்ள மரங்களை அழித்து கான்கிரீட் காடுகளாக மாற்றிக்கொண்டு வருகிறோம்.   இதனால் எதிர்கால சந்ததியினருக்கு நாம் கொடுப்பது பலமற்ற உடலையும், நோயும்தான். மரங்களின் மருத்துவப் பயன்கள் அளவற்றவை.  எதிர்விளைவு களை ஏற்படுத் தாதவை.  இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் கருங்காலி மரமும் ஒன்று. பொதுவாக கருங்காலி மரம் இந்தியா முழுமைக்கும், மியான்மர், மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் அதிகம் காணப்படுகிறது. இதன் பட்டை, பிசின், வேர் அதிக மருத்துவப் பயன் கொண்டவை.  துவர்ப்புத் தன்மை மிக்கது. கருங்காலியைப் பற்றி பழந்தமிழ் பாடலில் ஔவையார் கருங்காலி கட்டைக்குக் கோணாத கோடாலி என்று பாடியுள்ளார்.   இதிலிருந்து கருங்காலி கட்டையின் தன்மை நமக்கு விளங்கும்.

பிரிண்ட் ஸ்கிரீன் பெற புதிய வழி

மானிட்டர் திரையில் காணும் காட்சிகளை அப்படியே பட பைலாகப் பெற நாம் எளிதான ஒரு வழியை இதுவரை பின்பற்றி வந்தோம். பிரிண்ட் ஸ்கிரீன் பட்டன் அழுத்தினால், திரைக்காட்சி கிளிப் போர்டுக்குச் செல்லும். பின் அதனை நாம் விரும்பும் இடத்தில் பேஸ்ட் செய்து எடிட் செய்து வருகிறோம். இன்னும் சற்றும் திறமையாகக் கையாள்பவர்கள், Alt-Prt Scr கட்டளை கொடுத்து, அப்போது செயல்பாட்டில் இருக்கும் விண்டோ காட்சியை மட்டும் படமாகப் பதிவு செய்வார்கள். இப்போது இதைக் காட்டிலும் சிறந்த வழி ஒன்று உள்ளது. இந்த வழி விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்தின் சில பதிப்புகளில் கிடைக்கிறது. இது மிக வேகமாகவும், எளிமையாகவும் இந்த வேலையைக் கையாள்கிறது. இதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும். ஸ்டார்ட் பட்டன் அழுத்தி, snip என டைப் செய்திடவும். பின்னர், Snipping Tool என்பதில் கிளிக் செய்திடவும். உடனடியாக இந்த புரோகிராம் செயல்படத் தொடங்கும். இப்போது உங்கள் மானிட்டர்

சிக்கன் பால்ஸ்

சிக்கன் பால்ஸ்   சிக்கனை அசைவப் பகோடா போல பொரித்தெடுத்து சிக்கன் பால்ஸ் செய்யலாம். இதில் மசாலா சேர்க்கப்படாமல் ரொட்டியும், முட்டையும் சேர்க்கப்படுவதால் அதிக சத்து நிறைந்தது. தேவையான பொருட்கள் சிக்கன் கொத்தியது – 1/4 கிலோ வெங்காயம் – 200 கிராம் பச்சை மிளகாய் – 4 முட்டை – 1 ரொட்டித் துண்டு – 4 உப்பு – தேவையான அளவு எண்ணை – பொரிப்பதற்கு செய்முறை * கொத்திய கோழி இறைச்சியை நன்கு வதக்கிக் கொள்ளவும். * பிறகு மிக்சியில் போட்டு சுற்றிக் கொள்ளவும். *

“மூன்று நாள்’ அவதியிலும் ஒரு நன்மை:ஸ்டெம் செல் ஏராளமாய் கிடைக்குதாம்

படம்
தொப்புள் கொடியிலிருந்து ஸ்டெம் செல் எடுத்ததைப் போல, இப்போது, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயின் போது, வெளியேறும் ரத்தத்திலிருந்து ஸ்டெம் செல் எடுக்க முடியும் என, கண்டறியப்பட்டுள்ளது. இது போன்று எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்லை, “லைப் செல் இன்டர்நேஷனல்’ என்ற தனியார் நிறுவனம், விற்பனைக்கே வைத்துள்ளது.வயிற்றில் குழந்தை உருவாகும் போது, அது வளர, தாயின் கர்ப்பப் பைக்கும், குழந்தையின் வயிற்றுக்கும் இணைப்பாக ஒரு கொடி உருவாகும். இது, தொப்புள் கொடி என அழைக்கப்படுகிறது. இந்த தொப்புள் கொடியில் உள்ள ரத்தத்தில், எந்த பாதிப்புக்கும் ஆளாகாத, புதிய வேர் செல்கள் இருக்கும். இந்த வேர் செல்களைக் கொண்டு, புற்றுநோய் உட்பட பல கொடிய நோய்களைத் தீர்க்கலாம் என, ஆய்ந்தறியப்பட்டுள்ளது.அமெரிக்காவில் தற்போது பக்க வாதம், முதுகெலும்பு பாதிப்பு போன்றவற்றுக்கு தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல் கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். தொப்புள் கொடியில் உள்ள ஸ்டெம் செல் சேகரிக்க என்று வங்கிகள் ஏற்கனவே வந்துவிட்டன.இத்தகைய வேர் செல்கள், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயின் போது வெளியேறும் ரத்தத்தில் இருப்பது தெரிய வந...