ஜியோனி பி 7 மேக்ஸ் ஸ்மார்ட்போன்

ஜியோனி நிறுவனம் தன் 'P Series' வரிசையில், புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை,
அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 13,999.

இதன் திரை 5.5 அங்குல அளவில் எச்.டி. டிஸ்பிளேயுடன் அமைக்கப்பட்டுள்ளது. NEG கிளாஸ் பாதுகாப்பு இதற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 1280 x 720 பிக்ஸெல்களாகும். 2.2. கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் மீடியா டெக்
MT6595 ப்ராசசர் இணைக்கப்பட்டுள்ளது. இதனுடன் இணைந்து இயங்கும் ஜி.பி.யு. PowerVR G6200. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 6.0 மார்ஷ்மலாய். எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 13 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாகவும், 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா முன்புறமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் போனின் ராம் மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. இதனை 128 ஜி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம். இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பரிமாணம் 157 x 77 x 9.1 மிமீ. எடை 182 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, வை பி, புளுடூத் 4.0. தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.

இதன் பேட்டரி 3,100 mAh திறன் கொண்டது. தங்கம் மற்றும் கிரே புளு நிறங்களில், இரண்டு விதமாக இவை கிடைக்கின்றன.

1080p அளவிலான டிஸ்பிளேயுடன் இந்த விலையில் ஸ்மார்ட் போன் கிடைப்பது நல்ல தேர்வு என வாடிக்கையாளர்கள் கருதுவார்கள் என இந்நிறுவன தலைமை நிர்வாகி அரவிந்த், இதன் அறிமுக விழாவில் குறிப்பிட்டார்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget