மைக்ரோமேக்ஸ் பி 701 ஸ்மார்ட்போன்

மைக்ரோமேக்ஸ் நிறுவனம், தன் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை, மத்திய நிலை விலையில் விற்பனைக்கு வெளியிட்டது. இதன் அதிக பட்ச விலை ரூ.
6,600. இதன் சிறப்பம்சங்கள்: 7 அங்குல அளவில், மல்ட்டி டச் வசதியுடன், ஐ.பி.எஸ். டிஸ்பிளே கொண்ட எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி அலைவரிசை செயல்பாடு, இரண்டு சிம் இயக்கம், ராம் மெமரி 1 ஜி.பி., ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. (32 ஜி.பி. வரை உயர்த்தும் வசதியுடன்), லவுட் ஸ்பீக்கர், நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, 4ஜி, புளுடூத் மற்றும் யு.எஸ்.பி. தொழில் நுட்பங்கள் ஆகியன உள்ளன.

இந்த ஸ்மார்ட் போனில், பின்புறமாக 5 எம்.பி. திறனுடன் இயங்கும் கேமராவும், முன்புறமாக 2 எம்.பி. திறனுடன் இயங்கும் கேமராவும் உள்ளன. இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் சிப் செட் MediaTek MT8735 ஆகும். 

அக்ஸிலரோமீட்டர் சென்சார் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.1. லாலிபாப். 

எச்.டி.எம்.எல். 5 பிரவுசர் உள்ளது. எம்.பி.3 மற்றும் எம்.பி.4 பிளேயர்கள் இயங்குகின்றன. ஜி.பி.எஸ். தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 3500 mAh திறன் கொண்டது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget