தமிழுக்கு இன்னொரு சோனா கிடைத்துள்ளார். இவர் மூத்த சோனா போல பெரிதாக இல்லை, அளவாக, கச்சிதமாக இருக்கிறார், கஞ்சி போட்டு துவைத்த காட்டன் புடவை போல. கொஞ்சம் சட்டுன்னு பார்த்தா சொர்ணமால்யாவையும், பிரியா மணியையும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்தது போலத் தெரிகிறார். அம்மணி கோலிவுட்டில் காலெடுத்து வைத்துள்ள முதல் படம் பெயர் துட்டு.
வழக்கம் போல இவரும் தமிழ்ப் பெண் அல்ல. ஏன் தமிழ் பேசத் தெரிந்த பெண் கூட அல்ல, ஆங்கிலத்தைத்தான் அழகாக பேசி வைக்கிறார். தமிழைப் பற்றிக் கேட்டால், இப்பத்தானே வந்திருக்கேன். அதுக்குள்ள என்ன அவசரம், மெதுவா கத்துக்கலாம் என்கிறார் படு கூலாக.
மும்பையிலிருந்து சென்னைக்கு சேபாக வந்து சேர்ந்துள்ள சோனா தனது முதல் படத்தில் ஆர்யன் ராஜேஷுடன் ஜோடி போடுகிறார். படத்தை இயக்குவது முரளி கிருஷ்ணா, இசையும் இவர்தான்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் நடிக்க வருகிறார் ஆர்யன். ஆல்பம்தான் இவர் கடைசியாக நடித்த படம்.
சரி, சோனா, முதல் படம் முடிவதற்குள்ளாகவே கொஞ்சம் தமிழைக் கத்துக்கோங்க, குறைந்தது 'தலைவி' நமீதா ரேஞ்சுக்காவது தமிழ்ல பேசப் பாருங்க...!