தொலைதொடர்பு சேவையில் மக்கள் கவனத்தை கவர்ந்து முன்நிலை வகித்து வரும் ஏர்டெல் நிறுவனம், தனது 4ஜி நெட்வொர்க் சேவையை பெங்களூரில் துவங்குவதாக அறிவித்துள்ளது. இந்த 4ஜி சேவையில் புதிய ‘ஸ்மார்ட்பைட்ஸ்’ திட்டத்தினையும் வழங்க உள்ளது ஏர்டெல். இதனால் கூடுதல் ஏட் ஆன் சேவைகளையும் பெறலாம் என்று கர்நாடகா முதலமைச்சர் டி.வி.சதானந்த கவுடா கூறினார்.
ஒவ்வொரு வருடமும் ஏர்டெல் சேவையை பயன்படுத்துவோரது எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டே வருவதாக பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் உயர் அதிகாரியான சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக தொலைதொடர்பு சேவையில் முன்நிலை வகித்து வருகிறது ஏர்டெல் நிறுவனம். இந்நிலையில் புதிய 4ஜி நெட்வொர்க் சேவையை உருவாக்கி தந்துள்ளது.
இந்த சேவை வசதி ஏற்கனவே கொல்கத்தாவில் உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் அதிகம் பெயர் பெற்ற தொழில் நுட்பமான 4ஜி நெட்வொர்க் சேவை வசதியினை, கொல்கத்தாவில் தொலைதொடர்பு அமைச்சர் கபில் சிபில் துவங்கி வைத்துள்ளார்.
கொல்கத்தாவில் ஏர்டெல் நிறுவனத்தின் மூலம் துவங்கப்பட்டுள்ள இந்த 4ஜி தொழில் நுட்பத்தில் உள்ள முக்கிய வசதிகளை பற்றியும் பார்ப்போம்.
இந்த 4ஜி தொழில் நுட்பம், 3ஜி தொழில் நுட்ப வசதியைவிட 5 மடங்கு அதி வேகம் கொண்டது. 3ஜி தொழில் நுட்பத்தில் ஒரு நொடிக்கு 21 எம்பி வரை டவுன்லோட் செய்ய முடியும்.
இதே 4ஜி நெட்வொர்க் வசதியில் ஒரு நொடிக்கு 100 எம்பி வரை எளிதாக டவுன்லோட் செய்ய முடியும். இந்த 4ஜி தொழில் நுட்ப சேவையில் சிறந்த வீடியோ கான்ஃபிரன்ஸிங் தொழில் நுட்பத்தினை பெறலாம். 4ஜி தொழில் நுட்பத்தினை இனி பூனே, சன்டிகார் ஆகிய இடங்களிலும் வழங்கு உள்ளது ஏர்டெல் நிறுவனம்.