அஜீத் VS கமல் VS விஜய்


2012-ம் ஆண்டின் கோடைகாலத்தில் எந்த முக்கிய ஹீரோக்களின் படமும் வெளிவரவில்லை என்றாலும் அவர்கள் படங்களின் போஸ்டர்களும், டிரெய்லர்களும் வெளிவந்து ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கின்றன.  சக்ரி டொலட்டி இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும்
பில்லா-2 படத்தின் டிரெய்லரும், போஸ்டரும் ஒரு கலக்கு கலக்கினாலும், பில்லா-2 படத்தின் பாடல்கள் வெளியானதும் பல ரசிகர்கள் ஒரே நேரத்தில் அவற்றை டவுன்லோடு செய்ய முற்பட்டதால் இணையதளங்கள் ஸ்தம்பித்துவிட்டன. 


இதே போல் 100 கோடி ரூபாய் பட்ஜட்டில் உருவான கமலஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் போஸ்டரும் 30 நொடி முன்னோட்டமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தின் போஸ்டரும் இதே சமயத்தில் வெளியாகி பல ரசிகர்களின் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் வால்பேப்பராகவும் மாறிவிட்டன. 


இதில் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட துப்பாக்கி, விஸ்வரூபம் படங்களின் போஸ்டர்கள் ஏப்ரல் 30-ம் தேதியே வெளியாகின. இவை உண்மையானவை தானா என ரசிகர்கள் குழப்பமடைந்தனர். கமல்ஹாஸனை தொடர்புகொள்ள முடியாமல் போனாலும், ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டர் இணையதளத்தில் இருப்பதால் முருகதாஸிடம் இந்த போஸ்டர் உண்மையானது தானா என கேள்விகள் பறந்தன. 


முருகதாஸ் அது உண்மையான துப்பாக்கி போஸ்டர் தான் என்று உறுதிபடுத்திய பின்னர் தான் ரசிகர்கள் மனம் அமைதியானது. கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வெளியான எதிர்பார்ப்பு நிறைந்த மூன்று படங்களையும் பார்த்தால் அதில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படம் தனியாக இருக்கிறது. அஜித் நடித்துள்ள பில்லா-2, கமல் நடித்துள்ள விஸ்வரூபம் ஆகிய படங்களின் போஸ்டர்கள் நவீன முறையில்(மோஷன் போஸ்டர் டெக்னாலஜி) உருவாக்கப்பட்டுள்ளன. 


மோஷன் போஸ்டர் முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர்களை எடிட் செய்வதும், வீடியோவில் பயன்படுத்துவதும் கடினமானதாம். அவ்வாறு பயன்படுத்தும் போது அவற்றின் தரம் குறைந்து விடும் என்கிறார்கள் கிராஃபிக்ஸ் டிஸைனர்கள். 


துப்பாக்கி படத்தின் போஸ்டர்கள் இதுவரை பயன்படுத்தப்பட்ட சாதாரண முறையிலேயே உருவாக்கப்பட்டிருப்பதால் அவற்றை எடிட் செய்வது எளிது என்கிறார்கள்.


 மோஷன் போஸ்டர் டெக்னாலஜி முறை இதுவரை பிரபல ஹாலிவுட் படங்களிலும், ஒரே ஒரு இந்தி படத்திலும் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget