ManicTime - கணினி பயன்பாடு கணக்கீட்டு மென்பொருள்


நாம் கணணியில் எந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினாலும், விளையாட்டினை விளையாடினாலும், இணைய இணைப்பில் தளங்களை பார்த்தாலும் மொத்த விபரங்களையும் எளிதில் அறிந்து கொள்ளலாம். அதுமட்டும் அல்லாமல் இந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் கணிணியில் செலவிட்டோம் என்பதனையும் துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.  6 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். நீங்கள் இதனை நிறுவியதும் ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் கணணி யூசேஜ் பச்சை நீறத்தில் வந்து விடும். சிகப்பு நிறம் கணணி உபயோகம் இல்லாத நேரத்தினை குறிக்கும்.  நீங்கள் எந்த எந்த அப்ளிகேஷன்களை எவ்வளவு நேரம் உபயோகித்தீர்கள் என இதில் உள்ள சார்ட் வைத்து எளிதில் அறிந்து கொள்ளலாம். எந்த எந்த அப்ளிகேஷனை நீங்கள் திறந்து பார்த்தீர்கள் என அறிந்து கொள்ளலாம்.  இதில் நேரத்தினையும் செட் செய்து விடலாம். இது தவிர அன்றைய பொழுதில் நீங்கள் எவ்வளவு நேரம் கணணியில் பணிபுரிந்தீர்கள் என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.  நீங்கள் அப்ளிகேஷன் டேபில் கர்சரை கொண்டு செல்ல எந்த இடத்தில் நீங்கள் எந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினீர்கள் என்கின்ற விவரம் தெரியும்.

இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:5.75MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget